ரோகித் கோலி பெரிய சம்பவம்.. உகோ-ல் உடைய இருக்கும் சச்சினின் மெகா 2 ரெக்கார்ட்!

0
1248
Sachin

இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் ஐசிசி மூன்று வகையான கிரிக்கெட் வடிவங்களுக்கும் உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்திற்கு சாம்பியன்ஸ் டிராபி நடத்துகிறது.

- Advertisement -

இந்திய அணி இது நாள் வரையில் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ட்ராபி மற்றும் ஒரு டி20 உலகக் கோப்பை டிராபி என கைப்பற்றி இருக்கிறது.

ஐசிசி தொடர்களை அதிக முறை கைப்பற்றிய அணியாக ஆஸ்திரேலிய அணிதான் இருந்து வருகிறது. குறிப்பாக ஐந்து முறை ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த வகையில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஐசிசி தொடர்களை குறைவாகத்தான் கைப்பற்றி இருக்கிறது. ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஐசிசி தொடர்களில் மிகச் சிறப்பான சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

சச்சின் ஒட்டுமொத்தமாக ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் அதிக ரன் குவித்த வீரராக இருந்து வருகிறார். மேலும் அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 6 சதங்கள் அடித்திருக்கிறார்.

நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இன்னும் ஒரு சதம் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போதைய சச்சின் சாதனை உடைக்கப்படும். சச்சின் ரோகித் சர்மா தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார்கள்.

மேலும் விராட் கோலி உலகக் கோப்பையில் இன்னும் 20 ரன்கள் எடுத்தால், ஒட்டுமொத்தமாக ஐசிசி நடத்தி உள்ள வெள்ளைப்பந்து உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறுவார். மேலும் இவரே இந்த வகையில் உலகின் முதல் வீரராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது!