“ரோகித் கோலி தேவையா?.. சின்ன பசங்களையே நம்பலாம்!” – ஹர்பஜன் சிங் தைரியமான பேச்சு!

0
139
Harbajan

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெற்று விளையாட இருக்கின்றன.

கடந்த உலகக்கோப்பையில் இரண்டு அணிகள் தகுதி சுற்றின் மூலம் கண்டறியப்பட்டன. இதற்காக கடந்த உலகக் கோப்பை நடைபெற்ற ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடத்தப்பட்டன.

- Advertisement -

ஆனால் தற்பொழுது அடுத்த வருட டி20 உலகக்கோப்பைக்கு விளையாடும் அனைத்து அணிகளும் ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டன. இதன் காரணமாக எல்லா அணிகளும் தங்களது தயாரிப்புகளில் ஈடுபட்டு இருக்கின்றன.

அதே சமயத்தில் பெரிய கிரிக்கெட் நாடுகளில் ஒன்றான இந்தியா டி20 உலகக் கோப்பைக்கு தயாராவது சில பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னடைவை தந்து கொண்டிருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்பது பின்னடைவுக்கு காரணமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இவர்கள் இருவரும் அணிக்குள் வருவார்கள் என்றால் தற்பொழுது சூரியகுமார் தலைமையில் விளையாடும் அணியில் இரண்டு இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை இழப்பார்கள். அதே சமயத்தில் நிறைய மாற்றங்களும் அணிக்குள் செய்ய வேண்டும். மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவர்கள் இருவரும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்பவில்லை என்பதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “சமீபத்திய போட்டிகளில் சூரியகுமார் அணி சிறப்பாக விளையாடியது. நாம் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பெரிய வீரர்கள். அவர்கள் டி20 கிரிக்கெட் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுடன் பேச வேண்டும்.

இப்போது நாம் நம்முடைய இளைஞர்களை ஆதரித்தால் சாதிக்க முடியும். டி20 உலகக்கோப்பைக்கு இந்த இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். அதே சமயத்தில் ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பிசிசிஐ நிர்வாகிகள் அவர்களது டி20 எதிர்காலம் பற்றி பேசி விடுவது நல்லது.

ரிங்கு சிங் ஒரு அற்புதமான திறமைசாலி. அவர் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் ஸ்டைலை ஒத்திருக்கிறார். அவரைப் போன்ற ஒரு வீரர் பேட்டிங் கீழ் வரிசையில் தேவை. அந்த இடத்தில் பினிஷர் ஆக விளையாடுவது கடினமானது. திறமையில் மட்டும் அல்லாமல் குணாதிசயத்திலும் ரிங்கு சிங் சிறப்பாக இருக்கிறார். அவர் களத்தில் இருந்தால் 25 பந்தில் 60 ரன்களும் எடுக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்.