“ரோகித் கோலி வேற மாதிரி இருக்காங்க.. சமியே பென்ஞ்ல..!” – பாபர் அசாமை கடுமையாக எச்சரித்த கம்ரன்அக்மல்!

0
6475
Akmal

பாகிஸ்தான் அணிக்கு சில வருடங்களுக்கு முன்பாக பாதுகாப்பு காரணம் காட்டி பெரிய அணிகள் யாரும் சென்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார்கள்.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. பொதுவான இடங்களில் பாகிஸ்தான் அணி தொடர்களை நடத்தினால், அதற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் பாபர் அசாம் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கடந்த சில வருடங்களில் உருவெடுத்து வந்தார். சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்களை விலக்கி, பாபர் அசாமை கேப்டனாகவும் கொண்டுவந்தது.

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு திடீரென்று டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கொடி உயரப் பறக்க ஆரம்பித்தது. அங்கிருந்து வெள்ளை பந்து வடிவத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான அணி மெதுவாக சிறப்பாக செயல்பட தொடங்கியது.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி 27 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு ஒப்புக்கொண்டது. அடுத்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பாகிஸ்தான் சென்று விளையாடியது.

- Advertisement -

இங்கிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிய எழுச்சி ஏற்பட இங்கிலாந்தும் பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வந்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக உள்நாட்டில் விளையாடி வெற்றிகளை குவித்து, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டது. பாகிஸ்தான் அணியாகவும் அதே நேரத்தில் பாபர் அசாம் பேட்ஸ்மேன் ஆகவும் தரவரிசைகளில் மிகுந்த உயரிய இடத்தை பெற்றார்கள்.

இந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்போடு நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இந்தியா பெரிய அடியை கொடுத்தது. அந்த இடத்தில் பாகிஸ்தான் விழ, அதை பயன்படுத்தி இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியை அடித்து வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வரவிடாமல் செய்துவிட்டது. இதனால் கேப்டன் பாபர் அசாம் மீது கடுமையான விமர்சனங்களை முன்னாள் வீரர்கள் வைத்து வருகிறார்கள்.

தற்பொழுது கேப்டன் பாபர் அசாமை உலகக் கோப்பைக்கு முன்பு எச்சரிக்கை படுத்தும் விதமாக பேசி உள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரன் அக்மல் கூறுகையில் “முகமது ஷமி பென்ஞ்சில் இருக்கிறார். அவர் இந்திய லெவனில் இடம் பிடித்து விளையாடவில்லை. அவர்கள் எவ்வளவு சிறப்பான முழுமையான பந்துவீச்சு யூனிட் ஆக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

ரோகித் சர்மா விராட் கோலி இருவரும் பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் இளம் வீரர் சுப்மன் கில் சமீபத்தில் அபாரமாக விளையாடி சதம் அடித்திருந்தார். எனவே இந்தியாவின் பேட்டிங் யூனிட்டும் மிகப் பலமாக தெரிகிறது.

பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் அவர்களை சந்திக்கும் பொழுது அழுத்தத்திற்கு உள்ளாக்க மிக நன்றாக திட்டமிட வேண்டும். ஆசியக் கோப்பையை விளையாடியது போலவோ அல்லது மூன்று வருடங்களாக இருந்தது போலவோ இருந்தால், இந்திய அணிக்கு எதிராக மீண்டும் பெரிய அடியை வாங்க வேண்டும்!” எனக் கூறியிருக்கிறார்!