பாவங்க ரோகித் நல்ல கேப்டன்.. தோனிக்கு கிடைச்ச அந்த விஷயத்த மட்டும் குடுத்து பாருங்க – யுவராஜ் சிங் பரிதாபம்!

0
742
Yuvraj

இந்தக் காலகட்டம் இந்திய கிரிக்கெட் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகின்ற காலக்கட்டம் மட்டும் கிடையாது, ஐசிசி தொடர்களை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தினால், இந்திய கிரிக்கெட் இருக்கின்ற உயரத்திற்கு, ஒரு ஐசிசி தொடரையாவது வெல்ல வேண்டிய நெருக்கடி நிலவுகின்ற காலகட்டமாக இருக்கிறது!

கடந்த நான்கு வருடங்களில் இரண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என நான்கு முறை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களையும், அமைப்பையும் ஏமாற்றி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கு அவநம்பிக்கை நிலவி வருகிறது.

- Advertisement -

இப்படியான நேரத்தில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருப்பது, இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு உலகக் கோப்பையை கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்று எந்த அணியாலும் களம் இறங்க முடியாது. அப்படிப்பட்ட நெருக்கடியோடு இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இறுதியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது போது, அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா என்று மிகப்பெரிய வீரர்கள் இருந்தார்கள். இதன் காரணமாகத்தான் அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தது.

நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கான தற்போதைய இந்திய அணியை எடுத்துப் பார்த்தால், இன்னும் யார் யார் விளையாடுவார்கள் என்பதே உறுதியாக தெரியாத அளவுக்கு இருக்கிறது. இது நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங் கூறுகையில் “ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை நீண்ட காலமாக வழி நடத்தியதால் ரோகித் சர்மா ஒரு நல்ல கேப்டனாக மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் அழுத்தத்தின் கீழ் விவேகமாக செயல்படும் ஒரு வீரர்.

இப்படி அனுபவமும் விவேகமும் வாய்ந்த ஒரு கேப்டனுக்கு இதைவிட ஒரு நல்ல அணியை கொடுக்க வேண்டும். தோனி ஒரு நல்ல கேப்டனாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு ஒரு நல்ல அணி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு குழு முயற்சியாக இருக்க வேண்டும். அழுத்தத்தின் கீழ் வீரர்கள் தங்கள் கைகளை உயர்த்த வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!