5 ஆண்டுகளில் விராட்கோலி செய்ததை முறியடித்த ரோகித் சர்மா; டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை!!

0
90

டி20 போட்டிகளில் கேப்டனாக புதிய சாதனையை படைத்திருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை முடித்துவிட்டு, தற்போது டி20 போட்டிக்கான தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகியிருந்த கேப்டன் ரோகித் சர்மா, டி20 தொடரில் இடம்பெற்று விளையாடி வருகிறார். 

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பிறகு, லிமிடெட் ஓவர் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிக் கொண்டார். அதன் பிறகு டி20 போட்டிகளின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளுக்கு தற்காலிக கேப்டன் ஆகவும் இருந்தார். பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளுக்கு நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ரோகித் சர்மா டி20 கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி தொடர்ந்து 13 போட்டிகளில் வெற்றியை குவித்தது. இதுவரை இந்திய அணிக்காக 34 போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ள ரோகித் சர்மா 28 போட்டிகளில் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். மேலும் தனது தனிப்பட்ட பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் பேட்டிங் செய்த அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். இதில் அவர் ஒரு சிக்சர் அடித்திருந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த  இந்திய கேப்டன் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். 

- Advertisement -

ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் 60 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இதற்கு அடுத்த அதிகபட்சமாக இருப்பது, முன்னாள் கேப்டன் விராத் கோலி. இவர் 59 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 34 சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

டி20 போட்டிகளில் அதே சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியல்:

1. ரோகித் சர்மா – 60 சிக்ஸர்கள் (34 போட்டிகள்)

2. விராத் கோலி 59 சிக்ஸர்கள் (50 போட்டிகள்) 

3. தோனி – 34 சிக்ஸர்கள் (72 போட்டிகள்)

ரோகித் சர்மா டி20 போட்டிகளின் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒரு தொடரைக் கூட இந்திய அணி தோல்வியை தழுவியதில்லை. இவர் தற்காலிக கேப்டனாக இருந்தபோது, 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலி 50 டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். அதில் 30 போட்டிகளில் வெற்றியும் 16 போட்டிகளில் தோல்வியும் இந்திய அணி தழுவி இருக்கிறது. இதற்கு முன்னர், தோனி 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார்.