“நீ முன்னாடியே போ.. நான் பின்னாடி வந்துட்டே இருக்கேன்” விராட் கோலியின் சாதனையை சமன்செய்த ஹிட்மேன் ரோகித்!!

0
76

இலங்கை அணிக்கு எதிரான ஆசியகோப்பை டி20 போட்டியில் அரைசதம் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்திருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டி20 போட்டிகளில் போட்டி போட்டுக் கொண்டு சாதனைகளை ஒருவர் பின் மற்றொருவர் முறியடித்து வருகின்றனர். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக விராட் கோலி அந்த இடத்திலிருந்தார். கடந்த இரண்டு தொடர்களில் விராட் கோலி விளையாடாததால் ரோஹித் சர்மா அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தில் உள்ளார்.

- Advertisement -

அதேபோல அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் வரிசையில் விராட் கோலி முன்னிலையில் இருந்தார். பிறகு ரோகித் சர்மா அதனை சமன் செய்தார். இந்த ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி மீண்டும் அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்திருந்தார். அதை அடுத்த போட்டியிலேயே ரோகித் சர்மா அரைசதம் அடித்து சமன் செய்திருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது இவரது 32 வது அரைசதம் ஆகும். கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது 32 வது அரைசதத்தை விராட் கோலி அடித்திருந்தார். இதன் மூலம் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருந்தார். தற்போது ரோகித் சர்மா சமன் செய்து மீண்டும் முதல் இடத்திற்கு வந்திருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் வெற்றிபெற இயலாமல் திணறி வருகிறது. விளையாடிய இரண்டு போட்டிகளில் இரண்டையும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்திய அணிக்கு இதில் கிடைத்த ஒரே ஆறுதல், முன்னணி பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் பார்மிற்கு திரும்பி இருக்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக இப்படி அனுபவ வீரர்கள் மீண்டும் நல்ல பேட்டிங் நிலைமைக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

  1. விராட் கோலி – 32 அரைசதங்கள்
  2. ரோகித் சர்மா – 32 அரைசதங்கள்
  3. பாபர் அசாம் – 27 அரைசதங்கள்
  4. டேவிட் வார்னர் – 23 அரைசதங்கள்
  5. மார்டின் கப்டில் – 22 அரைசதங்கள்