“ரோகித் டிராவிட் பாய் சொன்னாங்க.. என் தனி பிளான் இதுவாதான் இருந்தது” – ஜெய்ஸ்வால் பேட்டி

0
455
Jaiswal

இன்று துவங்கிய இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் ஜெய்ஸ்வால் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 257 பந்துகளில் 179 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் பேட்டிங் தனிப்பட்ட முறையில் சிறப்பாக இருந்த போதிலும், இன்னும் மிகச் சிறப்பாக தெரிவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இவருக்கு அடுத்து இந்திய அணிகள் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் கில் அடித்திருக்கும் 34 ரன்கள் தான்.

இந்திய சூழ்நிலையில் அனுபவமற்ற இங்கிலாந்து பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்பற்ற முறையில் விளையாட தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறார்கள்.

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தான் ஜெய்ஸ்வால் பெரிய அளவில் ரன்கள் குவித்ததோடு மட்டும் அல்லாமல், ஒவ்வொரு செசனிலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி புத்திசாலித்தனமாக விளையாடி ரன்கள் அடித்ததோடு, நாளை விளையாடுவதற்கும் விக்கெட்டை கொடுக்காமல் தயாராக இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய ஆட்ட நேர முடிவிற்கு பிறகு பேசி உள்ள ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “நான் ஒவ்வொரு செசனாக விளையாட விரும்பினேன். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பந்து
வீசும்பொழுது, அந்த ஸ்பெல்லை கடந்து சென்றுவிட நினைத்தேன்.

ஆரம்பத்தில் விக்கெட் ஈரமாக இருந்ததோடு கொஞ்சம் பவுன்ஸ் மற்றும் ஸ்பின் இருந்தது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. ஆனாலும் தவறான பந்துகள் கிடைக்கும் பொழுது அதை அடித்து ரன்கள் எடுக்க முடிவு செய்து கொண்டேன். மேலும் கடைசி வரை களத்தில் நிற்கவும் முடிவு செய்தேன்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் அதிகபட்ச ரன்.. 35 ரன்களை தொடாத இந்திய பேட்ஸ்மேன்கள்.. இங்கிலாந்து அணி சமாளிப்பு

நாளைய போட்டிக்கு நான் ரெக்கவரி ஆகவேண்டும். இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் செய்தது. ரோகித் பாய் மற்றும் டிராவிட் பாய் இருவரும் எனக்கு நம்பிக்கை அளித்து, இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் விளையாட சொன்னார்கள்” என்று கூறியிருக்கிறார்