ரோஹித்!கில்! அபார சதம்!-வலுவான நிலையில் இந்தியா!

0
438

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது .

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் மற்றும் கில் அணியின் ஸ்கோர் வேகமாக உயர பவுண்டரிகளும்,சிக்ஸர்களும் விளாசினர். இந்திய அணியின் அதிரடியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். 15 ஓவர்களுக்கு முன்பாகவே ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் தங்களது அரை சதத்தை நிறைவு செய்தனர் .

இது ரோகித் சர்மா இந்த தொடரில் அடிக்கும் இரண்டாவது அரை சதமாகும். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் கில்லும் இந்தப் போட்டியில் தனது ஒரு நாள் கிரிக்கெட்டின் ஐந்தாவது அரை சதத்தை பதிவு செய்தார்.

சமீபத்திய ஒரு நாள் மட்டும் டி20 தொடர்களில் சரியாக ஆடாத கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வேகமாக ரண்களை குவித்தார். ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு சிக்சர் என்ற விதத்தில் ஆடினார் ரோஹித் சர்மா . மிகச் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா தனது வழக்கமான ஸ்டைலிஷ் ஷாட்களின் மூலம் இமாலய சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை உற்சாகமாக்கினார் .

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் தனது முப்பதாவது சதத்தை இன்று நிறைவு செய்தார். இதில் 6 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும் . கடைசியாக ரோகித் சர்மா ஜனவரி 19 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக ஆடிய அவர் பிரேஸ்வெல் பந்துவீச்சில் 100 ரண்களில் அவுட் ஆனார்.

இவருடன் மற்றொரு துவக்க வீரரான கில்லும் மிகச் சிறப்பாக அதிரடியாக ஆடினார் ரோஹித் சர்மாவை தொடர்ந்து கில் ஒரு நாள் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். 74 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த கில் 112 ரன்களில் ஆட்டம் இழந்தார் . இதில் 13 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம்.

இந்திய அணி தற்போது 231 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து ஆடிக் கொண்டிருக்கிறது. விராட் கோலி 19 ரண்களுடனும் இசான் கிசான் ரன் கணக்கை துவக்காமலும் களத்தில் உள்ளனர்.