“ரிஸ்வான் – பாபரை இப்படித்தான் முடிக்கவேண்டும்” – செம ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இர்பான் பதான்!

0
3297
Irfan pathan

அக்டோபர் 22-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய பாகிஸ்தான் அணிகள் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் மோதுகின்றன!

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்த படுதோல்வியை இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேற முக்கியக் காரணமாக அமைந்தது.

- Advertisement -

அந்தக் குறிப்பிட்ட போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி எவ்வளவு பெரிய முக்கிய காரணமாக இருந்தாரோ அதேபோல் பேட்டிங்கில் பாபர் – ரிஸ்வான் ஜோடி இருந்தது. இவர்கள் இருவரில் ஒருவர் இந்தப் போட்டியில் முதலில் ஆட்டம் இழந்திருந்தாலும், இந்திய அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி என்பது இருந்திருக்காது. போட்டியின் முடிவுகளில் பெரிய மாற்றங்கள் இருந்திருக்கும்.

தற்சமயத்தில் டி-20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து கவனித்து வந்தால் ஒரு முக்கிய விஷயம் தெரியவரும். என்னவென்றால், பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பது துவக்க வீரர்களான பாபர் மற்றும் ரிஸ்வான்தான். நடு வரிசையில் வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை.

இந்த காரணத்தால் பாகிஸ்தான் அணியைக் குறைந்த ரன்களில் சுருட்ட, ரிஸ்வான் மற்றும் பாபரை சீக்கிரத்தில் வெளியேற்றுவது அவசியமாகிறது. இந்த காரணத்தால், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான், ரிஸ்வான் மற்றும் பாபருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று ஆழமான தனது யோசனையை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி இர்பான் பதான் கூறும்பொழுது ” இருவருக்குமே பந்துவீசும் பொழுது வெளியில் வீசக் கூடாது. குறிப்பாக ரிஸ்வானுக்கு அப்படி வீசக் கூடாது. பவர் பிளேவை அவர் தனது தோள்களில் சுமக்கிறார். அதே சமயத்தில் பாபர் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறார். இப்படியான சூழலில் இப்படியான இருவருக்கும் எப்படி பந்து வீசுவது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் ” என்றிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய இர்பான் பதான் ” பந்தை தொடர்ந்து இருவருக்குமே ஸ்டம்ப் லைனில் வீச வேண்டும். ஆனால் வீசப்படும் லென்த்தில் கொஞ்சம் மாறுபாடு உண்டு. ரிஸ்வான் எனும்பொழுது பந்தை கொஞ்சம் ஃபுல்லாக வீசலாம். அதாவது பந்து அவரது முழங்காலில் படும்படியான லென்த்தில் வீச வேண்டும் ” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” இதுவே பாபருக்கு வீசும் பொழுது, அவரை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். இதற்காக பந்தை அவரது முன் காலை குறிவைத்து வீசக் கூடாது. பின் காலை குறிவைத்து வீச வேண்டும். ஏனென்றால் பாபர் கொஞ்சம் பேட்டிங்கில் திறந்து நின்று இருப்பார். இந்த இடத்தில்தான் இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், அர்ஸ்தீப் இருவரும் இன் ஸ்விங் ஆயுதத்தோடு களம் இறங்குகிறார்கள். அதே போல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில்லை என்று நாம் உணர வேண்டும். இதனால் பவர் பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு ஓவர் தருவது பற்றி இந்திய அணி நிர்வாகம் திட்டமிட வேண்டும் ” என்று மிக விலாவரியாக தனது திட்டத்தை முன்வைத்திருக்கிறார் இர்பான் பதான்!