இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரியான் பராக் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தபோதும் சிறப்பான முறையில் கில், ஜெய்ஸ்வால் சூரியகுமார் மற்றும் ரிஷப் பண்ட் விளையாட 213 ரன்கள் குவித்தது. பதிரனா நான்கு விக்கெட் கைப்பற்றி இந்திய அணியை தடுக்காமல் இருந்திருந்தால் இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருக்கும்.
இதற்கு அடுத்து 14 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பெரிய சவால் கொடுத்தது. அதற்கு அடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கைப்பற்றி திருப்புமுனையை உருவாக்க, சூரியகுமார் யாதவ் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக 17வது ஓவருக்கு ரியான் பராக்கை கொண்டு வந்தார்.
ரியான் பராக் மொத்தம் 1.2 ஓவர்கள் பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். மூன்றுமே போல்ட் மூலம் அவருக்கு கிடைத்தது. அந்த இடத்தில் அவர் பந்து வீச வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் பந்து வீச்சு காண தயாரிப்புகள் எப்படி அமைந்தது? என்பது குறித்து ரியான் பராக் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ரியான் பராக் கூறும்பொழுது “எனக்கு பந்து வீசுவது மிகவும் பிடிக்கும். எனவே நான் திரைக்குப் பின்னால் எப்பொழுதும் வந்து வீசிக் கொண்டிருப்பேன். நான் எப்படி பந்து வீச வேண்டுமென எனக்கு நிறைய தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது. கம்பீர் சாரிடம் சூழ்நிலைகளில் நான் பந்து வீசுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே இருந்தது.
இதையும் படிங்க : புதிய கோச் கேப்டன் வந்ததும்.. இந்திய டீமில் நடந்த மாற்றம் இதுதான் – அக்சர் படேல் ஓபன் டாக்
மேலும் ஆடுகளத்தில் பந்து திரும்பினால் நான் 16ஆவது 17வது ஓவரில் பந்து வீச வேண்டியது இருக்கும். அந்த இடத்தில் நான் பந்து வீசுவதற்கான வேலையை ஏற்கனவே பந்து வீசியவர்கள் எளிதாக்கி இருந்தார்கள். எனவே நான் நேராக வந்து ஸ்டெம்ப் டு ஸ்டெம்ப் பந்து வீசினால் போதுமாக இருந்தது. நான் அதைத்தான் தொடர்ந்து செய்து வந்தேன்” என்று கூறியிருக்கிறார்.