காலில் கட்டுபோட்டிருந்த ரிஷப் பண்ட்; உலககோப்பையிலிருந்து விலகுகிறாரா? – கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு பதில் சொல்ல மறுக்கும் இந்திய அணி நிர்வாகம்!

0
828

காலில் கட்டுபோட்டுக்கொண்டு அமர்ந்திருந்த ரிஷப் பண்ட்டை பார்த்ததும் ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணிக்கு வீரர்களின் காயம் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. ஆசிய கோப்பை தொடரின் போது

- Advertisement -

ஜடேஜா காயம் காரணமாக ஆசியகோப்பை தொடரின் பாதியில் விலகினார். விரைவில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்த்த போது துரதிஷ்டவசமாக காயத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் உலகக்கோப்பை தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

அதற்கு அடுத்து நல்ல விஷயமாக, பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்திருந்தார். ஆகையால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த நல்ல விஷயமும் நீடிக்காமல் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் முன்னர் காயம் ஏற்பட்டு மீண்டும் சர்வதேச அணையிலிருந்து விலகினார். டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு மாற்றாக தற்போது முகமது சமி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரின் போது தீபக் சகர் கணுக்காலில் பிசகு ஏற்பட்டதால், அவரும் உலக கோப்பை ரிசர்வ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து காயத்தினால் இந்திய அணி பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம் பெறவில்லை. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. போட்டியின் நடுவே வெளியில் அமர்ந்து கொண்டு போட்டியை கவனித்துக் கொண்டிருந்தார் ரிஷபண்ட்.

அப்போது அவரது காலில் பெரிய அளவில் கட்டு போடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் ரசிகர்கள் ரிஷப் பண்ட்டிற்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வெளியில் இப்படி அமர்த்தப்பட்டு இருக்கிறார்? என தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். பயிற்சியின்போது அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவருக்கு கட்டு போடப்பட்டிருப்பதாகவும் இந்திய அணியின் தரப்பிலிருந்து வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காயத்தின் தீவிரம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஆகையால் இந்திய அணி நிர்வாகமும் சற்று பதட்டத்துடன் இருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை ரிஷப் பண்ட் காயம் சற்று தீவிரமாக இல்லை என்றால், ஓரிரு போட்டிகள் வெளியில் அமரவைக்கப்பட்டு அவருக்கு நன்றாக குணமடைந்த பின், மீண்டும் விளையாட வைக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டின் காயத்தை பொதுவெளியில் கூறாமல் இருந்திருக்கலாம் என்கிற தகவல்களும் வருகின்றன.