இந்திய அணியில் ரிஷப் பண்ட்டின் எதிர்காலம் என்ன? சச்சின் டெண்டுல்கர் கணிப்பு!

0
1553
Sachin

அதிரடியான பேட்டிங் மூலம் அறியப்பட்ட ஒரு வீரர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பை பெறுவதும் டி20 போட்டியில் ஆடும் அணியில் இடம் கிடைக்காமல் இருப்பதும் ரிஷப் பண்ட்க்கு மட்டுமே நிகழும் ஒரு அரிய சம்பவம் என்றே கூறலாம்.

டெஸ்ட் போட்டிகளில் சீரான ரன் குவிப்பை காட்டிவரும் ரிஷப் பண்ட், உடனுக்குடன் ரன் அடிக்க வேண்டிய டி20 கிரிக்கெட் வடிவத்தில் சற்று தடுமாறி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் கூட ஓரளவுக்கு இவரிடமிருந்து நல்ல இன்னிங்ஸ்களில் வருகிறது.

- Advertisement -

இவரின் இந்தப் பிரச்சினையை உணர்ந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இவரை நடுவரிசையில் அனுப்பாமல் துவக்க வீரராக அனுப்பிப் பார்த்தார்கள். ஆனால் கிடைக்கும் முடிவு தோல்வியாகவே இருந்தது.

இவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் மேலும் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் இவரை ஒதுக்கவும் முடியாமல் அதே சமயத்தில் இவரை அணிக்குள் எடுக்கவும் முடியாமல் இந்திய அணி நிர்வாகம் சிக்கலில் இருக்கிறது.

இவரை 15 பேர் கொண்ட அணிக்குள் எடுத்து வைத்துக் கொண்டு, 37 வயதான சீனியர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் விளையாட வைக்கப்படுகிறார். ரிஷப் பண்ட் மேல் அணி நிர்வாகத்திற்கு ஒரு முழு நம்பிக்கை இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.

- Advertisement -

தற்போது இவரது எதிர்காலம் குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் பேசும்பொழுது “சந்தேகமே இல்லாமல் இடதுகை பேட்ஸ்மேன்கள் அணிக்கு மிகவும் பலம் சேர்க்க கூடியவர்கள். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது கடினம் அதேபோல் பீல்டர்களையும் மாற்ற வேண்டும். மேலும் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் களத்தில் சீராக ரன்களை எடுக்கக் கூடியவர் என்றால் அதை எந்த பந்து வீச்சாளரும் விரும்பமாட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய சச்சின்
” ஒரு இடது கை பேட்ஸ்மேன் முதல் மூன்று இடங்களில் மட்டும் வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். பேட்டிங்கில் எந்த இடத்தில் என்றாலுமே, அணிக்கு எந்த வீரர்கள் தேவை என்று பார்க்க வேண்டும். அந்த வீரர்கள் எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அடுத்து எதிரணியின் பலத்தை மதிப்பிட வேண்டும். இதைப் பொறுத்துதான் வாய்ப்பு அமையும்” என்று கூறியிருக்கிறார்.