தோனியின் வேகத்தில் ரிஷப் பண்ட் அசத்தல் ஸ்டம்பிங்; வீடியோ இணைப்பு!

0
242
rishabh pant ms dhoni

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி முடிவினை நெருங்கிக் கொண்டிருக்கிறது நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் பங்களாதேஷ் அணி 272 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது . பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷக்கிபுல்ஹாசன் 40 ரண்களுடனும் மெஹதி ஹசன் ஒன்பது ரண்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் 241 ரன்கள் எடுக்க வேண்டி இருப்பதால் இன்றைய அணியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . இன்றைய நாளை விக்கெட் இழப்பின்றி தொடங்கிய பங்களாதேஷ் அணி உணவு இடைவேளை வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . அதன் பிறகு உமேஷ் யாதவ் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்று தந்தார் . முதல் விக்கெட் இழப்பிற்கு பின் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி இன்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது .

அந்த அணியின் அறிமுக வீரர் ஜாகிர் ஹசன் அருமையாக ஆடி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் . சாண்டோ மற்றும் முஸ்பிகுர் ரஹிம் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக ஆடினர் . தேநீர் இடைவேளைக்கு பின்பான ஆட்டத்தில் இந்திய அணி புதிய பந்தை எடுத்தது. அந்த ஓவரை வீசிய அக்சர் பட்டேல் முஸ்பிகுர் ரஹீமின் விக்கெட்டை வீழ்த்தினார் . அதற்கு அடுத்த ஆட வந்த பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் ரிஷப் பண்டின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் ஆட்டம் இழந்தார் .

அக்சர் பட்டேல் வீசிய பிளைட் டெலிவரியை ஃப்ரண்ட் புட்டில் சென்று ஆட முயன்ற நூருல் ஹசன் சிறிது பேலன்ஸ் தடுமாறி அவரது காலை கிரீஸில் இருந்து லேசாக உயர்த்திய அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பின் பைல்ஸை எடுத்து அவரை ஆட்டம் இழக்கச் செய்தார். இவர் செய்த இந்த ஸ்டம்பிங் ஆனது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் களத்தில் கண்டது போல் இருந்தது . இந்த அருமையான ஸ்டம்பிங் இன் வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது .