2 இங்கிலாந்து வீரர்களுக்கு இடம்; ரோகித், சூர்யகுமார், விராட் கோலி இல்லாமல் கனவு டி20 அணியை தேர்வு செய்த ரிஷப் பண்ட்!

0
1711

ஐந்து பேர் கொண்ட கனவு டி20 அணியை தேர்வு செய்து இருக்கிறார் ரிஷப் பண்ட்.

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டிக்கு முன்பு இரண்டு பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல் ரவுண்டர் மற்றும் இரண்டு பந்துவீச்சாளர்கள் என ஐந்து பேர் கொண்ட கனவு அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

இதில் பலரும் ஆச்சரியப்படும் விதமாக இருப்பது மிகச்சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரையும் ரிஷப்மென்ட் எடுக்காதது தான். அவர் தனது அணியின் பேட்டிங்கில்ல் முதலாவதாக ஜோஸ் பட்லரை தேர்வு செய்து இருக்கிறார்.

இது பற்றி கூறுகையில், “டி20 பேட்டிங் என்றாலே நிச்சயம் அவர் இருப்பார். துவக்கத்தில் இறங்கி பௌண்டரி சிக்சர்களாக விலாசக் கூடியவர். நிச்சயம் அவர் இல்லாமல், எப்படி எனது அணி இருக்கும். அடுத்ததாக லிவிங்ஸ்டன். இவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆல் ரவுண்டராக அசத்துகிறார். பீல்டிங்கில் பின்னி பெடல் எடுக்கிறார்.” என்றார்.

“அடுத்ததாக, என் அணியில் பும்ரா இல்லாமல் எப்படி. அவரது டெத் ஓவர்களுக்கு என்று எனது அணியில் அவருக்கு இடம் உண்டு. சுழல் பந்துவீச்சில் ரஷித் கான் நிச்சயம் இருப்பார். கடந்த ஆறு, ஏழு வருடங்களாக பந்துவீச்சில் அசத்தி வரும் இவர், சமீப காலமாக பேட்டிங்கில் உச்சத்தை தொட்டிருக்கிறார். நிச்சயம் அவரை எனது அணியில் எடுக்காமல் இருக்க மாட்டேன்.”

“கடைசியாக இந்த அணியில் நான் என்னை எடுத்துக் கொள்வேன். ஏனெனில் என் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் வேறு யாரால் வைக்க முடியும்.” என்று தெரிவித்தார்

ரிஷப் பண்ட் தேர்வு செய்திருக்கும் ஐந்து பேர் கொண்ட கனவு:

ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், ஜஸ்பிரீத் பும்ரா, ரஷித் கான், ரிஷப் பண்ட்