ரிஷப் பண்டா? கே எல் ராகுலா? இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? கவாஸ்கர் பதில

0
343

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் செயல்பட்டார். தொடர்ந்து ஓய்வின்றி கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருவதால் கஷ்டப்பட்டு ரிஷப் பண்ட்க்கு தொடரில் கடைசி நேரத்தில் ஓய்வு வழங்கப்பட்டது. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடாமல் பண்ட் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

இதனால்  அவளுடைய இடத்திற்கு சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்ற ரசிகர்கள்  பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், இந்திய நிர்வாகம்  கேஎல் ராகுலை வைத்து களம் இறங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் , தவான் அல்லது ரோஹித் சர்மா இதுவருடன் தொடக்க வீரராக கே எல் ராகுல் களம் இறங்கி விளையாடி வருகிறார். பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் கூட கே எல் ராகுல் அசத்துகிறார். என்னைக் கேட்டால் நடுவரசையில் அவருடைய இடத்தை உறுதி செய்து கொள்ள கே எல் ராகுல் முயற்சி செய்ய வேண்டும்.

- Advertisement -

கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டால் இந்தியா கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை சேர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். கே எல் ராகுல் தான் உண்மையான ஆல் ரவுண்டர். அவர் தொடக்க வீரராகவும் நடு வரிசையிலும் பேட்டிங் செய்வதால் அவரை அப்படித்தான் அழைக்க வேண்டும். கே எல் ராகுலுக்கு பல சாட்டுகள் ஆடத் தெரியும். இதனால், ஒரு நாள் கிரிக்கெட் பொறுத்தவரை அவர் பினிஷர் ரோலில் தயார்படுத்தலாம்.

இதேபோன்று தொடக்க வீரராக சுப்மான் கில் அல்லது ஷிகர் தவான் இரண்டு பேரில் யார் இந்திய அணிக்கு வேண்டும் என கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர் வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங் இறங்கினால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறினார். ஷிகர் தவான் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் இனி வரும் போட்டிகளில் தவான் தான் களமிறங்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறினார்.