“டி20 கிரிக்கெட்டில் நான் சரியாக விளையாடுவதில்லை.. ஆனால்..” ரிஷப் பண்ட் உருக்கம்

0
1375
Rishabh pant sad

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாடியதில்லை என்று நட்சத்திர கிரிக்கெட் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நாள் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால், இந்திய வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து பேசிய ரிஷப் பந்த் போட்டி நாளில் மட்டும் மழை பெய்கிறது.மற்ற நாட்கள் எல்லாம் மழை இல்லை என்று நினைக்கும் போது கடுப்பாக இருக்கிறது. ஆனால் மழை குறித்து நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்த அளவுக்கு மழை பெய்யும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் நடுவரிசையில் விளையாட விரும்புகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட் போட்டியில் நான் டாப் ஆர்டரில் விளையாட ஆசைப்படுகிறேன். ஒரு நாள் போட்டியில் நடுவரிசை எனக்கு பொருத்தமான இடமாக இருக்கும். டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே ரன்களை அடிக்க எதிர்பார்த்து ஆட வேண்டும்.

- Advertisement -

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அப்படி இல்லை. நான் களத்தில் நின்று ரன் அடிக்க கொஞ்சம் நேரம் இருக்கும். இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்யும்போது உங்களுடைய யுத்திகள் முற்றிலும் மாறுபட வேண்டும். ஆனால் இந்த இடத்தில் தான் ஆடுவேன் என்று சொல்ல முடியாது.அணிக்கு என்ன தேவையோ அதை தான் நான் செய்ய வேண்டும்.இதனால் தான் டி20 கிரிக்கெட் என்னுடைய ரெக்கார்ட்கள் சரியில்லை என்று எனக்கு தெரியும். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு வயது 24 தான் ஆகிறது. இதனால் நான் என்னுடைய ரெக்கார்டள் குறித்து கவலைப்பட வில்லை.

நிச்சயமாக நான் மீண்டும் ரன் குவிப்பேன். விக்கெட் கீப்பருக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். டெஸ்ட் ,ஒரு நாள் மற்றும் டி20 என எந்த தொடராக இருந்தாலும் சரி அதற்காக நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனக்கு ஓய்வு நேரமே கிடையாது. இந்த தொடர் முடிந்தவுடன் நேரடியாக நான் வங்கதேசம் செல்கிறேன் என்று ரிஷப் பந்த் கூறினார்.