வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல் – மாற்று வீரர் அறிவிப்பு ; துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

0
546
Washington Sundar and Rishabh Pant

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக நடைபெற்ற இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கேப்டன் ரோகித் பெற்றார். ஒருநாள் தொடர் முடிந்த பின்பு தற்போது டி20 தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கனவே பல மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் பல கோடிகளுக்கு ஏலம் போய் உள்ளனர். தற்போது தங்களது திறமையை மீண்டும் வெளிப்படுத்தி விளையாடும் அணியில் இடம் பிடிப்பது அந்த வீரர்களுக்கு நோக்கமாக இருக்கிறது. இதன் காரணமாக இவரும் டி20 தொடரில் அதிக சிக்சர்களை எதிர்பார்க்கலாம். மேலும் ருத்ராஜ், ஹூடா, அவேஷ் கான் பிஷ்னோய் போன்ற இந்திய வீரர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் அவர்களும் தங்களது திறமையை அதிகமாக வெளிப்படுத்தலாம்.

- Advertisement -

மேலும் இந்த டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர், காயத்திலிருந்து குணமாகி மீண்டும் போட்டிகளில் இந்தியாவுக்கு தற்போதுதான் விளையாடி வந்தார். ஆனால் மீண்டும் அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. பின் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வருகின்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக முன்னெச்சரிக்கையாக இவரை அணியிலிருந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப்பை இந்தியா அழைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் இவர் கடைசியாக டி20 போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஏலத்தில் இவர் புதிதாக டெல்லி அணிக்கு விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏலம் முடிந்து சில மணி நேரத்திலேயே மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் குல்தீப்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர் என்று வர்ணிக்கப்பட்ட குல்தீப் சில காலமாகவே அணியில் இடம்பெறாமல் வந்தார். தற்போது மீண்டும் அமைதி திரும்பியுள்ள குல்தீப்பின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -