வெற்றிகரமாக முடிந்தது மூட்டு அறுவை சிகிச்சை!- நன்றாக குணமாகி வருகிறார் ரிஷப் பண்ட்!

0
348

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் .இவர் கடந்த வாரம் டெல்லி -டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயம் அடைந்தார் . அதனைத் தொடர்ந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையான கோகிலாபெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .

மேக்ஸ் மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் வசதியுடன் பிசிசிஐ மாற்றி இருந்தது .

- Advertisement -

இந்நிலையில் ரிசப் பண்டின் மூட்டுத் தசை நார் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை இந்தியாவில் செய்வதாக அல்லது லண்டனில் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதாயென பிசிசிஐ மருத்துவக் குழு உடன் ஆலோசனை நடத்தியது. லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால் ரிசப் பண்டின் காயங்கள் குணமாக சிறிது காலங்கள் தேவைப்படும் .

இதனை அடுத்து மும்பையின் கோகிலா பெண் மருத்துவமனையிலேயே ரிஷப் பண்டிற்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . நான்கு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது . இதுகுறித்து மிட்டே பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் டின்ஷா பார்திவாலா “ரிசப் பண்டின் மூட்டு அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது .அவர் நன்றாக குணமாகி வருகிறார்”என்று தெரிவித்தார்.

அவரது அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிவடைந்தாலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தாக்கங்கள் குணமடைய சில காலங்கள் தேவைப்படும் . பொதுவாக மூட்டு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வீரர் தனது பயிற்சியை தொடங்க குறைந்தது ஆறு மாதங்கள் தேவைப்படும்.

- Advertisement -

ரிசப் பண்டின் காயங்கள் முழுமையாக குணமடைந்து அவர் மீண்டும் தனது கிரிக்கெட்டை துவங்க ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . அவரது சிகிச்சை மற்றும் உடல் நலன் குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர் .