இந்திய கிரிக்கெட்

அவர் இருக்கும்போது நான் ஏன் இதை பத்தி யோசிக்கணும்?. பந்த் குறித்து ஜூரல் ஓபன் டாக்!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், ரிஷப் பந்த்திடம் தான் அடிக்கடி ஆலோசனை கேட்பதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியில் பந்த் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருப்பது தனக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பந்த் ஏற்படுத்திய தாக்கத்தை குறிப்பிட்ட துருவ் ஜூரல், முக்கியமான சூழ்நிலைகளில் பந்த்தின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, போட்டியின் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பந்த்திடம் கேட்டு தெரிந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்ற வரும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துரு துருவ் ஜூரேல் 115 ரன்கள் குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்து குறித்து அவர் கூறும் போது “பந்த் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இந்தியாவுக்காக அவர் செய்த விஷயங்கள் மிகப்பெரியது. எனவே, அவர் அணியில் இருக்கும்போது நான் அவருடைய ஆலோசனையை மட்டுமே நாடுவேன். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எப்போதும் அவரிடம் ஆலோசனை கேட்பேன்” என துருவ் ஜூரல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by