ரிஷப் பண்ட்டை திடீரென வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ.. உண்மையில் என்ன நடந்தது?

0
7154

வங்கதேசம் அணியுடன் நடைபெறும் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் ரிஷப் பண்ட்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி தற்போது டாக்கா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது

- Advertisement -

வங்கதேச அணியுடன் நடைபெறும் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இடம்பெற்றிருந்தார். இவர் திடீரென ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். “பிசிசிஐ மருத்துவ குழுவினரிடம் ஆலோசத்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என அணி நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை பற்றி தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிகளுக்குள் மீண்டும் இந்திய அணியில் இணைவார் ரிஷப் பண்ட் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் ஒருநாள் தொடரில் இருக்கும் அக்ஸர் பட்டேல், முதல்நாள் போட்டியில் மட்டும் இல்லை. இதற்கான காரணமும் வெளிவரவில்லை. இளம் வேகபந்துவீச்சாளர் குலதீப் சென் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

- Advertisement -

இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்பு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில், “மைதானம் முதலில் பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சவாலை ஏற்றுக் கொண்டு செயல்படுவோம். அணியில் சிலருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. காயத்தில் இருக்கிறார்கள். கே எல் ராகுல் கீப்பிங் செய்கிறார். மேலும் நான்கு ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்குகிறோம். குல்தீப் சென் அறிமுகமாகிறார்.” என்று பேசினார்.