ஸ்டம்ப்பிங் செய்யும் நோக்கத்தில் வில்லியம்சனின் கேட்சை தவறவிட்ட ரிஷப் பண்ட் – கடுப்பான அஷ்வின்

0
91
Rishabh Pant drops Kane Williamson's Catch

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி அமீரக மைதானங்களில் நடந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் டாஸ் வென்ற தைத் தவிர வேறு எதுவுமே சிறப்பாக அமையவில்லை சன்ரைசர்ஸ் அணிக்கு. அந்த அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அணியை தொடர் சரிவில் இருந்து மீட்க மூன்றாவது வீரராகவே கேப்டன் வில்லியம்சன் களத்திற்கு வந்து விட்டார்.

ஆனால் விளம்பரம் பந்தை டைவிங் செய்வதில் மிகவும் திணறி வந்தார். மறுமுனையில் ஆடிய வீரர்களும் சரியாக ஆடாமல் திணற கேப்டன் வில்லியம்சன் மீது அழுத்தம் அதிகமானது. ரன்கள் எடுப்பதற்குள் கட்டாயம் இருந்ததால் கேப்டன் வில்லியம்சன் அதிரடிக்கு மாற முடிவு செய்தார். 9வது ஓவரில் அஸ்வின் வீசும்போது அந்த ஓவரில் லாங் ஆன் திசையில் ஒரு பவுண்டரி அடித்து ஆரம்பித்தார் வில்லியம்சன். அதே ஓவரில் மற்றொரு பந்தையும் சமாளிக்க இறங்கிவந்த வில்லியம்சனை ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்ய நினைத்தார் ரிஷப் பண்ட். ஆனால் பந்து வில்லியம்சனின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி இருந்தது. டெல்லி அணி கேப்டன் பண்ட் இதை உணராது தனது முழு கவனத்தையும் ஸ்டம்பிங் செய்வதிலேயே கொண்டிருந்தார்.

- Advertisement -

இதனால் வில்லியம்சன் கொடுத்த அழகான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் ரிஷப் பண்ட். இதுபோன்ற நேரங்களில் எல்லாம் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தும் வில்லியம்சன் இந்த முறை அப்படி செய்ய முடியாமல் போனது. இத்தனைக்கும் அடுத்த ஓவரிலேயே மற்றொரு கேட்ச் வாய்ப்பை டெல்லி அணி தவற விட்டாலும் அதை வில்லியம்ஸ் ஆனால் பயன்படுத்த முடியாமல் போனது. கடைசியில் 26 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் அவுட் ஆனார் வில்லியம்சன்.

பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்த பிட்ச்சில் தன்னுடைய கேப்டன்சி திறமையை அபாரமாக வெளிப்படுத்தினார் பண்ட். தேவையான நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களையும் பேட்ஸ்மேன்களை தடுமாற வைக்க தனது வேகப்பந்து வீச்சாளர்களையும் சரியாகப் பயன்படுத்தினார். கேப்டன் விராட் கோலி தற்போது தனது கேப்டன் பதவியை துறந்த நிலையில் அடுத்து டி20 அணிக்கு குறைந்தபட்சம் துணை கேப்டனாக பண்ட் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.