72 ஆண்டுகால சாதனையை உடைத்து ரிஷப் பண்ட் புதிய சாதனை !

0
165
Rishabh Pant

கிரிக்கெட் விளையாட்டில் எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது போல, கிரிக்கெட் வீரர்களுக்கும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ரிஷாப் பண்ட்டின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தலைமைத் தாங்கும் ரிஷாப் பண்ட்டின் பேட்டிங்கும் கேப்டன்சியும் சுமாராகவே இருந்தது. தனது கவனக்குறைவான கேப்டன்சியால் அணி பிளே-ஆப்ஸ் போகும் வாய்ப்பையே இழக்க வைத்தார்.

- Advertisement -

ஐ.பி.எல் இப்படியென்றால்; ஐ.பி.எல் முடிந்து செளத் ஆப்பிரிக்க அணியோடு நடைபெற்ற டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், கே.எல்.ராகுல் காயம் அடைந்ததால் கேப்டன் பதவியை ஏற்ற ரிஷாப் பண்ட் கேப்டன்சி பிரசரால் மொத்தமாய் பேட்டிங்கில் சறுக்கினார்.

இதற்குப் பிறகு இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற ரிஷாப் பண்ட், இங்கிலாந்து அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்ததின் மூலம் 72 ஆண்டுகால உலகசாதனை ஒன்றை உடைத்திருக்கிறார்.

இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
2022 – ரிஷாப் பண்ட் – 203 ரன்கள்
1950 – க்ளைடு வால்காட் – 182 ரன்கள்
2001 – ஆடம் கில்கிறிஸ்ட் – 152 ரன்கள்
2011 – எம்.எஸ்.தோனி – 151 ரன்கள்

- Advertisement -

மேலும் எஸ்.இ.என்.ஏ நாடுகளில் ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தனது சாதனையை ரிஷாப் பண்ட் தற்போது முறியடித்திருக்கிறார்.

ரிஷாப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2022ஆம் ஆண்டு 203 ரன்கள்.
ரிஷாப் பண்ட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019ஆம் ஆண்டு 159 ரன்கள்.
எம்.எஸ்.தோனி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு 151 ரன்கள்.
ரிஷாப் பண்ட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு 133 ரன்கள்.