தோனியின் 15 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

0
1270
ms dhoni rishabh pant

பங்களாதேஷ்  மற்றும் இந்திய அணிகளுக்கிடையான  இரண்டாவது டெஸ்ட் போட்டியின்  இரண்டாவது நாளான இன்று  இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது .

அதிகபட்சமாக  ரிஷப் பண்ட்  93 ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் அணியின்  பந்து வீச்சில்  கேப்டன் ஷகீப்
அல் ஹசன் மற்றும் ‘தைஜூல் இஸ்லாம்’ ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். உணவு இடைவேளையின் போது  94 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து  தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை ஸ்ரேயஸ் ஐயர் மற்றும்  ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களின் அதிரடி ஆட்டத்தால் மீட்டனர் .

- Advertisement -

அதிரடியாக ஆடிய பண்ட் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்தியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில்  பங்களாதேஷ் அணிக்கு எதிராக  அதிவேக அரை சதம் எடுத்தவர்  என்ற சாதனையை படைத்தார் ரிசப் பண்ட்.

இதற்கு முன்பு இந்த சாதனையானது 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம் எஸ் தோனி வசம் இருந்தது . தோனி 2007 ஆம் ஆண்டு  பங்களாதேஷ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதுவே சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு இன்றைய போட்டியில் ரிஷப் பன்ட் அந்த சாதனையை முறியடித்துள்ளார் . தோனியை தனது ரோல் மாடலாக பாவித்து வரும் ரிஷப் பண்ட் தோனியின் சாதனைகளை முறியடித்து இருப்பது அவருக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொடுக்கும்.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணியை விட 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது . தற்போது பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது . குறைவான இலக்கங்களில் பங்களாதேஷ் அணியை சுருட்டி விட்டு இரண்டாவது டெஸ்டையும் இந்திய அணி வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும்.