89 ஆண்டுகளாக எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பராலும் நிகழ்த்த முடியாத சாதனையை செய்துக் காட்டியுள்ள ரிஷப் பண்ட்

0
1722
Rishabh Pant Man of the Series

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முடிவடைந்தது. முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இலங்கை அணியை 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா முழுநேர கேப்டன் ஆன பின்னர் அவரது தலைமையில் இந்திய அணி மொத்தமாக 14 சர்வதேச வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றிருக்கிறது.நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் (3-0) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் (3-0) மற்றும் டி20 தொடர் (3-0) இலங்கை அணிக்கு எதிராக டி20(3-0) மற்றும் டெஸ்ட் தொடர் (2-0) என அனைத்து தொடரையும் தோல்வியின்றி கைப்பற்றியிருக்கிறார்.

- Advertisement -

அதேபோல 2021-2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சாதனை படைத்துள்ள ரிஷப் பண்ட்

இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது ரிஷப் பண்ட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 96 ரன்கள் குவித்து அசத்தினார். 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் என மொத்தமாக நடந்து முடிந்துள்ள தொடங்கி 185 ரன்கள் குவித்துள்ளார்.

பேட்டிங் மற்றும் என்று விக்கெட் கீப்பிங்கிலும் மிக சிறப்பாக தனது பணியைச் செய்து முடித்திருக்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்த காரணத்தினால் ரிஷப் பண்ட்டிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி ஜூன் மாதம் 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. சுமார் 89 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணியில் விளையாடி இருக்கின்றனர். தலை சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் எம்எஸ் தோனி நயன் மோங்கியா சையது கிர்மானி கிரன் மோர் போன்ற பேட்ஸ்மேன்கள் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றியதில்லை.

ஆனால் அந்தப் பெருமைக்கு தற்பொழுது ரிஷப் பண்ட் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதன் மூலமாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் மத்தியில் முதல் முறையாக தொடர் நாயகன் விருது பெற்ற பெருமை தற்பொழுது ரிஷப் பண்ட்டிற்கு கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது.