இந்திய கிரிக்கெட்

வரலாறை தெரிஞ்சுக்கணும்.. தனி ஒருத்தனா நின்னு ரோஹித் சர்மாவை உருவாக்கியது நான்தான் – ரிக்கி பாண்டிங் பேச்சு

இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மாவை முதல் முதலில் கேப்டனாக கொண்டு வந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தது தான் என்று ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருந்து விலகிய பொழுது உடனடியாக இளம் வீரரான ரோகித் சர்மாவை கேப்டன் ஆக்கி ஆச்சரியப்படுத்தினார். அந்த சமயத்தில் இதை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆச்சரியமான முடிவாக அமைந்தது.

தனி ஒருவனாக செய்தேன்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “எனக்கு ரோகித் சர்மாவை நன்றாக தெரியும் அவருடன் இணைந்து விளையாடவும் அவருக்கு பயிற்சி அளிக்கவும் எனக்கு வாய்ப்பு இருந்தது. நான் 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ்கேப்டன் குரூப்பில் இருந்து விலகிய பொழுது, முதல் முறையாக அணியை வழிநடத்தும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தேன். அந்த பொறுப்புக்கு அவரை தனி ஒருவனாக நான் கொண்டு வந்தேன்”

“பொதுவாக ஒரு கேப்டனை நீங்கள் களத்தில் வைத்து மட்டுமே முடிவு செய்து விட முடியாது. களத்திற்கு வெளியே அவர் என்ன செய்கிறார் என்பது தான் மிகவும் முக்கியமானது. ஒரு அணியை உருவாக்குவது களத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. நான் ரோகித் சர்மாவின் உழைப்பை 100 சதவீதம் மதிக்க செய்கிறேன்”

- Advertisement -

இதுதான் முக்கியம்

“ஒரு உண்மையான கேப்டனின் பங்கு என்பது வீரர்களுடன் நீங்கள் வெளியில் எவ்வாறு பழகுகிறீர்கள், அவர்களிடமிருந்து சிறந்ததை எப்படி கொண்டு வருகிறீர்கள், அவர்களின் குணாதிசயங்களை எப்படி புரிந்து கொள்கிறீர்கள், மேலும் அவர்களுடைய சிறந்த பார்மில் நீங்கள் அவர்களை எப்படி வெளிப்பட அனுமதிக்கிறீர்கள்? என்பதெல்லாம் மிகவும் முக்கியம்”

இதையும் படிங்க : 14.2 கோடி வீரர்.. தோனி சார் என்கிட்ட கிரிக்கெட் பத்தி பேசல.. பணத்தை பத்தி இதான் பேசினார் – பிரசாந்த் வீர் பேட்டி

“ரோகித்தைப் பொறுத்தவரை அவர் தனது அணி வீரர்கள் மீது மிகவும் அக்கறை உள்ளவர் என்று எனக்கு தெரியும். அவரால் முடிந்த வரையில் தனது அணி மீது அக்கறை செலுத்துவார். அப்படி செய்தால் உங்கள் வீரர்களிடமிருந்து சிறந்ததை வெளியில் கொண்டு வர முடியும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -
Published by