ராஜஸ்தான் அணிக்கு எதிரான நோபால் சர்ச்சை & பண்ட் செயல் குறித்து தன் கருத்தைப் பதிவிட்டுள்ள ரிக்கி பாண்டிங்

0
46
Ricky Ponting about Pant No ball issue

ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் ஏதாவதொரு ஆட்ட விதிகளுக்குள் வராத, ஆனால் ஆட்டத்தை விட சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறுவதும். அது விவாதமாவதும், ஒரு சாரர் எதிர்ப்பதும், ஒரு சாரர் ஆதரிப்பமாய் இருக்கும். கடந்த சீசனில் நோ-பால் குறித்து, எப்போதுமில்லா ஆச்சரியமாக மகேந்திர சிங் தோனி களத்திற்குள் சென்று நடுவர்களோடு வாதிட்டது அமைந்தது.

இந்த சீசனிலும் ராஜஸ்தான் அணியுடனான போட்டியில், உயர நோ-பால் தொடர்பான விசயத்தில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப்பின் செயல்பாடும் அப்படித்தான் இருந்தது. விதிமுறைகளின் படி உயர நோ-பாலுக்காக மூன்றாம் நடுவரிடம் போக முடியாதென்றாலும், அது நோ-பால் என்று சர்ச்சையானதோடு, ரிஷாப் தன் அணி பேட்ஸ்மேன்களை விளையாட வேண்டாம் என்று உள்ளுக்குள் அழைத்ததோடு, துணைப் பயிற்சியாளரை களத்திற்கு அனுப்பி அதகளம் செய்தார். இது கிரிக்கெட் உலகில் எதிர்ப்பு ஆதரவு என்று இருவேறு அதிர்வலைகளை உருவாக்கியது.

டெல்லி அணிக்குள் கொரோனா ஊடுருவி இருந்ததால், டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அந்த ஆட்டத்திற்கு மைதானத்திற்குள் வரவில்லை. ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அப்பொழுதே பெரும்பாலான கிரிக்கெட் இரசிகர்கள் அவர் களத்தில் இருந்திருந்தால் நடப்பதே வேறு என்று பேசி வந்தார்கள்.

இப்பொழுது இதுக்குறித்து கருத்துக் கூறியிருக்கும் ரிக்கி பாண்டிங் “அது தவறு. அங்கு நடந்தது எதுவுமே சரியில்லை. அம்பயர்கள் செய்தது ரொம்ப தவறு. எங்கள் அணி வீரர்கள் அப்பொழுது களத்தில் செயல்பட்டதை, நான் என் நண்பர்களிடம் பெருமையாகத்தான் கூறியிருந்தேன்.

கோவிட் பிரச்சினையால் ஒருவார காலம் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டது மிகுந்த அழுத்தத்தை உருவாக்கி விட்டது. இதெல்லாம் சேர்ந்து அந்த நேரத்தில் வெளியேவந்துவிட்டது. தொடர் பாதியைக் கடந்திருக்கிறது. நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு, மறுபாதி தொடரை புதிதாய் ஆரம்பிக்க வேண்டும் என்று அணி வீரர்களுக்கு சொல்லியிருக்கிறேன். அப்படித்தான் செயல்படுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.