இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் பொறுப்புக்கு கீழ் இந்திய அணி முதல் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இந்த மாத இறுதியில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் சீனியர் வீரர்களுக்கு கம்பீர் வித்தியாசமான ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைய கடந்த வாரத்தில் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணிக்கு கம்பீர் அறிவிக்கப்பட்டார். இதற்கு அடுத்து இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கு இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ்.லக்ஷ்மன் சென்றார்.
இந்த நிலையில் இந்திய அணி இந்த மாத இறுதியில் 27 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கம்பீர் கவனிக்க இருக்கிறார். மேலும் இதற்கான அணி அறிவிப்பு ஆலோசனையிலும் நாளை கலந்து கொள்கிறார். மேலும் இதற்கான அணி அறிவிப்பும் நாளை நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் வீரர்கள் ஃபார்மிலும் உடல் தகுதியோடும் இருந்தால் அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கம்பீர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தி வருவதாக செய்திகள் கூறுகிறது.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவ இந்த விஷயத்துல.. வாஷிங்டன் சுந்தர் போல நம்ப முடியாது – ஹைதராபாத் கோச் பேட்டி
இதன் காரணமாக மூத்த வீரர்கள் யாருக்கும் ஓய்வு கொடுக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைத்துவிட்டது என்றும், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் எல்லா வீரர்களும் பங்கேற்க வேண்டும் என கம்பீர் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் மூத்த வீரர்கள் நீண்ட ஓய்வெடுத்து செப்டம்பர் மாதத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்பவே விரும்புகிறார்கள். கம்பீர் இன்னும் பொறுப்பை எடுக்காத முன்னமே உரசல்கள் ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது!