இந்திய கிரிக்கெட்

2வது டெஸ்ட்.. இந்திய பயிற்சி முகாமில் சோகம்.. கம்பீர் 2 வீரர்களுடன் ஆலோசனை.. சிராஜ் செய்த காரியம்

இன்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியை துவங்கியது. ஆனால் இந்திய அணியின் பயிற்சி முகாமில் நிறைய குழப்பங்கள் காணப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது.

பயிற்சி முகாமில் சோகம்

இன்று தொடங்கிய இந்திய அணியின் பயிற்சியில் முக்கிய வீரரான பும்ரா பங்கு பெறவில்லை என்று செய்திகள் கூறுகிறது. மேலும் இவருடன் பிரசித் கிருஷ்ணாவும் இன்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும் முக்கிய விஷயமாக சிராஜ் என்று முழுவதும் பெரிய அளவில் பேட்டிங் பயிற்சி செய்திருக்கிறார். கீழ் வரிசை பேட்டிங்கை பலப்படுத்துவதற்கு கம்பீர் முயற்சி செய்வதாக தெரிகிறது.

இத்துடன் இன்றைய பயிற்சியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் இருந்தார் என்றும் செய்திகள் கூறுகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரில் ஒருவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு பின்னடைவு

தற்போது இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு விளையாடுவார் என தெரிகிறது. அவரை 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சேர்த்து இருக்கிறார்கள். எனவே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

இதையும் படிங்க : இதே கோலியாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு.. கில் ரொம்ப தற்காப்பு மன நிலையில் இருக்கிறார்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சனம்

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்த்ததை விட பும்ரா அதிகம் அவர்கள் வீச வேண்டி இருந்தது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி நிர்வாகம் தள்ளப்பட்டு இருக்கிறது. இன்றைய பயிற்சிக்கும் அவர் வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஆர்ச்சர் வருகின்ற நிலையில் பும்ரா விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும்.

- Advertisement -
Published by