சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொயீன் அலிக்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ள 5 வீரர்கள்

0
2596
Moeen Ali in IPL 2021

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் மொயீன் அலி மிக அற்புதமாக சென்னை அணிக்காக விளையாடினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடி 206 ரன்கள் குவித்து இருந்தார். இவரது பேட்டிங் ஆவரேஜ் 34.33 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 157.25 ஆகும். அதுபோலவே பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு 6 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார். இவரது பந்து வீச்சு எகானமி 6.17 ஆகும்.

மிகச் சிறப்பாக 3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங்கில் மிகப்பெரிய துவக்கத்தை சென்னை அணிக்காக ஏற்படுத்திக்கொடுத்தார். சிறந்த ஆல்ரவுண்டராக முதல் பாதியில் விளையாடிய இவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் என்கிற செய்தி சென்னை அணி நிர்வாகத்திற்கு வருத்தமான செய்தியாக தற்போது அமைந்துள்ளது.

இருப்பினும் இவருக்கு மாற்று வீரராக சென்னை அணி நிர்வாகம் வேறு ஒரு வீரரை கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் இவருக்கு மாற்று வீரராக விளையாட அதிக வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்ற தற்போது பார்ப்போம்.

5. காலின் முன்றோ

நியூசிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஓபனிங் வீரரான இவர், சில சமயங்களில் பந்து வீசுவார். அவ்வளவாக ஐபிஎல் தொடரில் இவர் விளையாடியது கிடையாது. இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு டி20 போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் தவறியதில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மைதானங்களில் இவரது அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கு கைகொடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவரை சென்னை நிர்வாகம் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

4. கிளென் பிலிப்பஸ்

Glenn Phillips

நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனா இவர் ஐபிஎல் தொடரில் விளையாடாதது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கலாம். நியூசிலாந்து எனக்காக சமீப காலத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி வருகிறார்.

டாப் ஆர்டரில் மிக சிறப்பாக விளையாடக் கூடிய அதே வேளையில் மிடில் ஓவர் களிலும் மிக சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்துவார். குறிப்பாக ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் இவர். எனவே மொயீன் அலிக்கு பதிலாக இவரும் சென்னையில் பங்குபற்ற விளையாட அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடதக்கது.

3. டேவான் கான்வாய்

Devon Conway
Photo: ICC

உலக அரங்கில் ஒரு நம்பிக்கைக்குரிய வீரராக இவரது பெயர் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. பெஸ்ட்20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்து வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு விளையாடிய டி20 போட்டிகளில் இவரது பேட்டிங் ஆவரேஜ் 59.12 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 151.12 ஆகும்.

நிச்சயமாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மைதானங்களில் இவரது அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கு கைகொடுக்கும். எனவே இவரும் மொயீன் அலிக்கு ஒரு சிறந்த மாற்று வீரராக சென்னை அணி நிர்வாகம் மத்தியில் கருதப் படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

2. ஹெய்ன்ரிச் கிளாஸ்ஸன்

Heinrich Klaasen

தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர் இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி இருக்கிறார். மேலும் உலக அளவில் நடக்கும் சிலர் டி20 தொடர்களிலும் தனது அதிரடி ஆட்டத்தை சமீப காலங்களாக காட்டி வருகிறார்.

மொயீன் அலி போலவே டாப் ஆர்டரில் நின்று மிக அதிரடியாக விளையாடக்கூடிய வீரரான இவர், சென்னை அணியில் விளையாடினால் நிச்சயமாக சென்னை அணிக்கு மிகப் பெரிய ஸ்கோரை குவித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். எனவே இவரும் மொயீன் அலிக்கு மாற்று வீரராக சென்னை அணியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

1. மேத்யூ வேட்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் t20 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான டி20 தொடர்களில் இவர் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

‌ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மைதானங்களில் இவர் நிச்சயமாக தன்னுடைய அதிரடி பேட்டிங்கை வெளி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மொயீன் அலிக்கு மாற்று வீரராக இவரும் ஒரு முக்கிய வீரராக சென்னை அணி நிர்வாகம் மத்தியில் கருதப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.