சூரியகுமாரை கொண்டாடிட்டு, இந்திய பெண் வீராங்கனை பண்ண சாதனையை மறந்துட்டோமே; பாராட்டி கவுரவித்த ஐசிசி!

0
116

2022ஆம் ஆண்டின் எமர்ஜிங் பெண் கிரிக்கெட் வீரர் விருதை பெற்றுள்ளார் ரேணுகா சிங்.

இந்திய ஆண்கள் டி20 அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவிற்கு 2022 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்தது. 9 அரைசதங்கள் இரண்டு சதங்கள் உட்பட, 31 டி20 போட்டிகளில் 188 ஸ்ட்ரைக் ரேட் உடன் 1164 ரன்கள் அடித்திருக்கிறார்.

இறுதியாக மக்கள் வாக்கெடுப்பில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை பெற்றார். இவருக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்து மழைகள் பொழிந்தன.

இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்-க்கு 2022ம் ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. ஒருநாள் போட்டிகளில 18 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 14.88 ஆகும். எக்கானமி 4.62 ஆகும்.

டி20 போட்டிகளில 23.95 ஸ்ட்ரைக் ரேட் உடன், 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். எக்கானமி 6.50 ஆகும். காமன்வெல்த் கேம்ஸ் தொடரிலும் முக்கிய பங்காற்றினார். லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ரேணுகா சிங், ஐசிசி வழங்கும் 2022ம் ஆண்டுக்கான எமர்ஜிங் வீராங்கனை விருதை பெற்றார். சூரியகுமார் யாதவ் கொண்டாடப்பட்ட அளவிற்க்கு ரேணுகா சிங் கொண்டாடப்படவில்லை. பாராட்டுகளும் பெரிதளவில் இல்லை.

Renuka singh credit : icc

இந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலககோப்பையை பெறுவதற்கு இந்திய பெண்கள் அணி ஆர்வமாக உள்ளது. முதல்முறையாக பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் வழிநடத்தும் இந்திய அணியில் ரேணுகா சிங் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்கா மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஆகையால் நல்ல பார்மில் இருக்கும் ரேணுகா, அதை தென்னாப்பிரிக்காவில் தொடர்வாரா என்பதை பார்ப்போம்.