ஐபிஎல்

இனி இந்த சேனலில் தான் ஐபிஎல் – 2022 ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற காத்திருக்கும் நிறுவனங்கள்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது. 2008 முதல் 2017ஆம் ஆண்டு வரை மொத்தமாக பத்து வருடம் துணை நிறுவனம் கையில் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஸ்டார் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியது.

- Advertisement -

16 ஆயிரத்து 348 கோடி ரூபாய்க்கு ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியை 35 கோடி இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் வாயிலாக பார்த்தது குறிப்பிடத்தக்கது. நம்பமுடியாத வருவாயை ஈட்டித் தரும் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை அடுத்த ஆண்டு கைப்பற்ற ஸ்டார் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் போட்டி போட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

250 கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்

இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள பாரிமேட்ச் நிறுவனத்தின் தலைவரான ஆண்டன் ருப்ளிஸ்கையி கிரிக்கெட் என்பது உலக அளவில் அதிக அளவில் பார்க்கப்படும் இரண்டாவது விளையாட்டாகும். சுமார் 250 கோடி ரசிகர்கள் இந்த விளையாட்டுக்கு சொந்தக்காரர்கள். கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல் தொடர் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அனைவராலும் இந்த டி20 தொடர் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இதில் வரும் வருவாயின் கணக்கு நம்ப முடியாத வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

சோனி நிறுவனம் சம்மதம் தெரிவிக்குமா

2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை 16 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது என்று சொன்னால் நிச்சயமாக அடுத்த ஆண்டு அதைவிட அதிகமான தொகைக்கு ஒளிபரப்பு உரிமை போய் சேரும். ஸ்டார் நிறுவனத்திடம் தொலைக்காட்சி உரிமை அதேபோல ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் (தொலைக்காட்சி சேனல் தவிர்த்து மொபைல் மற்றும் கணினி மூலமாக ஒளிபரப்புவது ) உரிமை உள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் தொலைக்காட்சி சேனல் உரிமை இல்லை.

- Advertisement -

எனவே ரிலையன்ஸ் நிறுவனம் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற முயற்சித்தால், முதலில் அந்த நிறுவனம் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் டீல் பேச வேண்டும். ஏறக்குறைய ரிலையன்ஸ் நிறுவனம் சோனி நிறுவனத்திடம் டீல் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது சாத்தியப்படக் கூடிய விஷயமாக என்ற கேள்வி கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சோனி நிறுவனம் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் இது சம்பந்தமாக பிசிசிஐ தரப்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Published by