ரிஷாப் பண்ட் வேண்டாம்; இவர்தான் சரியானவர் – இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் அதிரடி கருத்து!

0
1762
Reedinter singh sodhi

இந்திய அணியில் தற்போது ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் என விக்கெட் கீப்பர்கள் ஒரே அணியில் இடம்பெற்று நிரம்பி வழிகிறார்கள். இதில்லாமல் அணிக்கு வெளியே விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்த கே.எல்.ராகுல் வெளியே இருக்கிறார். ஒரு காலக்கட்டத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் போல ஒரு அதிரடி பேட்டிங் திறமையுடைய விக்கெட் கீப்பர் இந்திய அணிக்குக் கிடைக்க மாட்டாரா என்ற பெரிய ஏக்கமே இருந்தது.

இந்த ஏக்கம் இந்தியாவிற்கு மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் நாடுகள் எல்லாவற்றுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. இதற்கான தேடலில் உலக கிரிக்கெட் நாடுகள் ஈடுபட சங்கக்கரா, எம்.எஸ்.தோனி கிடைத்தார்கள். ஆனால் இன்று இந்திய கிரிக்கெட்டில் நிலைமை தலைகீழாய் மாறி எக்கச்சக்க விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் குவிந்து கிடக்கிறார்கள்.

- Advertisement -

இதேபோல இந்திய கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரர்களும் அதிகளவில் இருக்கிறார்கள். ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் என்று சீனியர்கள் ஒருபுறமும், ருதுராஜ், இஷான் கிஷான், சுப்மன் கில் என்று இளம் வீரர்கள் ஒருபுறம் இருக்க, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் என்று நடுவரிசை வீரர்களையும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்கள்.

அயர்லாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சனையும், இங்கிலாந்து தொடரில் டி20 தொடரில் ரிஷாப் பண்ட்டையும், நடைபெற்று வரும் வெஸ்ட்இன்டீஸ் டி20 தொடரில் ரிஷாப் பண்ட்டையும் துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்கி இந்திய அணி நிர்வாகம் பரிசோதித்து வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் மட்டுமே அயர்லாந்துக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் துவக்க வீரராகக் களமிறங்கி அரைசதமடித்தார். இங்கிலாந்து தொடரில் துவக்க ஆட்டக்காரராக இரு போட்டிகளில் களமிறங்கிய ரிஷாப் பண்ட் பெரிதாக ரன்களை கொண்டுவரவில்லை. சூர்யகுமாரும் 16 பந்துகளில் 24 ரன்கள் என்று இரு அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்துக் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தற்போது இதுகுறித்து, 2000ஆம் ஆண்டு இந்திய அன்டர் 19 அணி உலகக்கோப்பையை வெல்ல ஒரு காரணமாகவும் இருந்தவரும், இந்திய அணிக்காக 18 போட்டிகளில் விளையாடியவருமான முன்னாள் இந்திய மிதவேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரிதிந்தர் சிங் தோனி கருத்துத் தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

அவர் இது சம்பந்தமாகக் கூறும்பொழுது “ரிஷாப் பண்ட்டை ஓபனராக இறக்க நான் ஆதரவளிக்க மாட்டேன். அவர் இந்திய அணியின் முக்கிய வீரர். அவர் 15-20 ஓவர்களின் போது இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்குத் தேவை. மிடில் ஓவர்களில் அவரைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் அவர் வேகம் மற்றும் சுழல் இரண்டையும் எதிர்த்து விளையாடுவார்” என்று தெரிவித்தார்!

மேலும் பேசிய அவர் “ரிஷாப் பண்ட் புதிய பந்தில் விளையாட மாட்டார் என்று நான் கூறவில்லை. ஆனால் டாப் ஆர்டருக்கு இந்தியாவுக்கு நிறைய சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. வெஸ்ட்இன்டீஸ் உடன் மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் இஷான் கிஷானை ஓபனராக இறக்க வேண்டும்” என்றும் கூறினார்!