இந்தியா – பங்களாதேஷ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்!

0
1699
Ind vs Ban

இந்திய வங்கதேச அணிகளுக்கிடையான மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது இந்தத் தொடரை வங்கதேச அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்று கைப்பற்றியது .

முதல் இரண்டு போட்டிகளை பங்களாதேஷ் அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி சிறப்பாக விளையாடி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இசான் கிசான் 210 ரன்களை குவித்து சாதனை படைத்தார். மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 44-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் .

விராட் கோலி மற்றும் இசான் கிசானின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4̓09 ரன்கள் குவித்தது . இதனைத் தொடர்ந்த ஆடிய பங்களாதேஷ் அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது .

இன்று நடைபெற்ற மூன்றாம் ஒருநாள் போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . ஏற்கனவே பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இந்தப் போட்டி ஒரு சம்பிரதாய போட்டியாக பார்க்கப்பட்டாலும் இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்தப் போட்டியை முக்கியத்துவம் பெற செய்கின்றன .

இந்தப் போட்டியின் முதல் சாதனையாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிசான் உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதத்தை பதிவு செய்தார் . இன்றைய போட்டியில் அவர் 126 பந்துகளில் 200 ரண்களைக் கடந்ததன் மூலம் க்ரிஷ் கெயிலின் சாதனையை முறியடித்தார் . யுனிவர்சல் பாஸ் க்ரிஷ் கெயில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 பந்துகளில் 200 ரண்களைக் கடந்தது இதற்கு முன் சாதனையாக இருந்தது இதற்கு முன் சாதனையாக இருந்தது

இந்தப் போட்டியில் மற்றொரு சாதனையாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் இஷான் கிசான் வசமே உள்ளது .

மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை இதற்கு முன் எம் எஸ் தோனியிடம் இருந்தது அவர் 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் எடுத்தது ஒரு நாள் போட்டியில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது அந்த சாதனையையும் இன்று 210 ரன்கள் அடித்ததன் மூலம் இசான் கிசான் முறியடித்தார் .

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை நானூருக்கும் அதிகமான ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்தது . சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி தான் இதற்கு முன் ஆறு முறை 400 ரன்களை கடந்து இருக்கிறது . இன்றைய போட்டியில் இந்திய அணி 49 ரன்களை எடுத்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்தது .

இந்திய அணி இன்றைய போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ்க்கு எதிரான அதிகபட்ச வெற்றியை பதிவு செய்துள்ளது .

இன்று இந்திய அணி குவித்த 409 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் பங்களாதேஷில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும் .

இந்திய அணி எடுத்த 409 ரன்கள் ஒரு அணி பங்களாதேஷிற்கு எதிராக எடுத்து அதிகபட்ச ஒரு நாள் போட்டி ஸ்கோர் ஆகும் .

இசான் கிசான் இன்று எடுத்த 210 ரன்கள் பங்களாதேஷ் மைதானங்களில் ஒரு தனிநபர் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் .

விராட் கோலி இசான் கிஷனும் இணைந்து இரண்டாவது விக்கெட் இருக்கு ஜோடியாக 290 ரண்களை சேர்த்தனர் . இது ஒரு நாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும் . மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்புகளின் வரிசையில் இது ஏழாம் இடத்தில் உள்ளது .