எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 66 நாடுகளா – 2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 இப்படித்தான் நடைபெறப் போகிறது

0
25

கடந்த ஆண்டு உலக கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்றது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.

பின்னர் மீண்டும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்டின்டிஸ் நாடுகளில் நடைபெற இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட போகின்றன.

முதல் 12 அணிகள் இப்படி தான் தகுதி பெறும்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் சிறப்பாக விளையாடும் முதல் 8 அணிகள் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கின்ற ஐசிசி டி20 தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடும்.

பின்னர் நவம்பர் மாத இறுதியில் ஐசிசி டி20 அணிகளின் தர வரிசை புள்ளி பட்டியலில் முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தமாக 12 அணிகள் (ஐசிசி தரவரிசை புள்ளி போட்டியில் 8 அணிகள் சேர்த்து அதற்குக் கீழ் இருக்கும் நான்கு அணிகள் ) 2024 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றுவிடும்.

ஜூன் மாதம் நடைபெற இருக்கும் தகுதி சுற்று தொடர் :

மீதமிருக்கும் 8 இடங்களுக்கு இந்த முறை அறுபத்தி ஆறு நாடுகள் போட்டி போட தயாராக இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் தகுதிச்சுற்று தொடர் வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கின்றது. ஆப்பிரிக்காவிலிருந்து 14 அணிகள் அமெரிக்காவிலிருந்து 8 அணிகள் ஆசியாவில் இருந்து ஒன்பது அணிகள் இஏபி நகரத்திலிருந்து 7 அணிகள் மற்றும் ஐரோப்பியாவில் இருந்து 28 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த அறுபத்தி ஆறு அணிகளில் ஹங்கேரி, ருமேனியா மற்றும் செர்பியாவை சேர்ந்த அணிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அணிகள் முதல் முறையாக உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அணிகளும் வெற்றி பெற விரும்புகிறேன் – கிறிஸ் டெட்லி

ஐசிசி நிகழ்வுகளின் தலைவர் கிறிஸ் டெட்லி இந்த மூன்று அணிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதேபோல எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வரலாறு காணாத அணிகள் போட்டி போட உள்ளன. டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியைத் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாம் பார்க்க போகிறோம். ஐசிசி நிகழ்வுகளில் முதல்முறையாக புதிய அணிகள் போட்டியிடுவதைக் காண்போம்.

இறுதியாக தொடரில் பங்கேற்கும் இருக்கும் அனைத்து அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.2024 இல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும் அனைத்துப் அணிகளும் வெற்றியைப் பெற விரும்புகிறேன் என்று கூறி முடித்தார்.