பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து பத்தாவது விக்கெட்டுக்கு சாதனை; தொடரும் சோகம்!

0
150
Pak vs Nz

நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மட்டும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆட உள்ளது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது . இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று கராச்சி நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது .

அரசியல் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆடியது . அந்த அணியின் துவக்க வீரர்களான காணவே மற்றும் டாம் லேதம் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர் . டபான் காணவே மிகச் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் நியூசிலாந்து அணி 309 ரன்கள் எடுத்திருந்தது ,

இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. இதனை அடுத்து 400 ரண்களுக்குள் நியூசிலாந்து அணியானது ஆட்டம் இழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் கடைசி விக்கெட் அஜாஸ் பட்டேல் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சிறப்பாக ஆடினார்.

அதிரடியாக ஆடியோ மேட் ஹென்றி தனது அரை சதத்தை நிறைவு செய்தார் . இவருக்கு பக்கபலமாக நின்று ஆடினார் அஜாஸ் பட்டேல். இருவரும் சிறப்பாக ஆடி அணியின் எண்ணிக்கையை 400 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 449 ரன் ஆக இருந்தபோது அப்ரார் அஹமத் அஜாஸ் பட்டேலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அடி 449 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அதிகபட்சமாக டௌன் கன்வே 122 ரண்களும் டாம் லேதம் 71 ரண்களும் எடுத்தனர் . சிறப்பாக ஆடிய மேட்டர் ஹென்றி 68 ரன்கள் உடன் ஆட்ட இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணியின் தரப்பில் அப்ரார் அஹமத் நான்கு விக்கெட்டுகளையும் நசிம் சா மற்றும் அகா சல்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதாஸ் பட்டேல் மற்றும் மேட் ஹென்றி ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தனர் , இது கடைசி விக்கெட்டுக்கு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் ஒரு வெளிநாட்டு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்