இந்திய இங்கிலாந்து தொடரில் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் காதுகளில் அணிந்திருப்பது என்ன கருவி தெரியுமா?

0
4142
England Cricket fans

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. தொடரை வெற்றிகரமாக தொடங்க இரண்டு அணியினரும் போராடி வருகின்றனர்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து விட்டதால் இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியிலும் இந்தத் தொடரில் அதிக கவனம் இழுத்தது, சில ரசிகர்கள் காதுகளில் அணிந்திருந்த கருவி தான். ஏர் பாட்ஸ் போன்று இருக்கும் ஒரு விதமான கருவியை ரசிகர்கள் பலர் தங்கள் காதுகளில் அணிந்த வண்ணம் இருந்தனர். இது என்ன கருவி என்று பலரும் யோசித்த வண்ணம் இருந்த போது தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் காதுகளில் அணிந்திருக்கும் கருவி

England Test Cricket fans

இந்தக் கருவி ஒரு ஹெட்போன் போல பயன்படும் என்று கூறப்படுகிறது. இது மைதானத்தில் இருந்து கிரிக்கெட் வர்ணனையை கேட்பதற்கு உதவுகிறது. ரசிகர்களின் கூட்டத்தால் ஏற்படும் சத்தத்தால் ஆட்டத்தை சரியாக பின்தொடர முடியவில்லை என்றால் இந்தக் கருவியை பயன்படுத்தி ஆட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆட்டம் எங்கு நடக்கிறதோ அந்த மாகாணத்தில் இருக்கும் ரேடியே சேனல் மூலமாக கிரிக்கெட் வர்ணனையை இந்த கருவி மூலம் கேட்கலாமாம்.

இந்தக் கருவியில் சிக்னல் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் மைதானத்தில் நடப்பதை ஓரளவு புரிந்து கொள்ள உதவுகிறது. ரக்பி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது. எந்த பேட்டிங் வீரர் எத்தனை பந்துகள் பிடித்துள்ளார், எத்தனையாவது ஓவர் போய்க்கொண்டு இருக்கிறது போன்று எல்லா விதமான தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் இந்த கருவி மூலம்.

ரசிகர்கள் மட்டுமல்ல, டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருப்போரும் இந்தக் கருவியை பயன்படுத்தி களத்தில் நடப்பதை சரியாக தெரிந்து கொள்கிறார்கள். அறிவியல் வளர்ச்சி, இது போன்ற சிறப்பான தொழில்நுட்பங்களை வழங்கி ஆட்டத்தை இன்னமும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது

- Advertisement -