கருப்பு நிற டி-சர்ட் அணிந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் வந்ததற்கான காரணம்

0
1723
England Test Cricket Team

இங்கிலாந்து சம்மர் என்று கூறப்படும் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கிரிக்கெட் திருவிழா கடந்த ஜுன் மாதம் துவங்கியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்ற தவறியது. அதன் பின்பு உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் தான் நடந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடியது. மழையால் பாதிக்கப்பட்டாலும் அந்த ஆட்டத்தை எளிதாக வென்று கோப்பையைக் கைப்பற்றியது நியூசிலாந்து.

இப்போது அடுத்த கட்டமாக இந்திய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. இன்று ஆரம்பித்து செப்டம்பர் பதினான்கு வரை மிக நீண்ட தொடராக நடக்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் இங்கிலாந்து நாட்டில் தளர்ந்து இருப்பதால் தற்போது ரசிகர்களும் ஆட்டத்தைக் காண மைதானத்திற்கு வரத் துவங்கி விட்டார்கள்.

- Advertisement -

கருப்பு நிற டி-சர்ட் அணிந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன் பிறகு இரண்டு அணிகளும் தங்கள் தங்கள் தேசிய கீதத்துக்கு தயாராகினர். அப்போது தான் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது. வழக்கமான வெள்ளை நிற ஆடையில் வராமல் இங்கிலாந்து அணியினர் கருப்பு நிறத்தில் டி-சர்ட் அணிந்து வந்தனர். கருப்பு நிற உடையில் பலருக்கு முன்பாக வந்து நின்று தேசிய கீதத்தை இசைத்தது பலரின் புருவங்களையும் உயர வைத்தது.

என்ன காரணத்திற்கு இங்கிலாந்து அணியினர் இப்படி செய்தார்கள் என்பது முதலில் புதிராக இருந்தாலும், இப்போது அதற்கு பதில் தெரிந்து விட்டது. IANS ரிப்போர்ட் படி, கிரிக்கெட் விளையாட்டை அனைத்து மக்களுக்கும் உரிய விளையாட்டாக மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் இவ்வாறு வித்தியாசமாக கவனம் ஈர்த்ததாக தெரிகிறது. கிரிக்கெட் அனைவருக்கும் பொதுவானது இதில் வேற்றுமை கிடையாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது.

ஏற்கனவே ஓலி ராபின்சனின் பழைய ட்வீட்டுகள் சர்ச்சையைக் கிளப்பி அது ஓய்ந்திருக்கும் நிலையில் மறுபடியும் தென் ஆப்ரிக்க நாட்டில் நிறவெறி பிரச்சனைகள் அணிக்குள் நிலவுவதாக பலர் தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற தலைப்பில் நிறவெறிக்கு ஆளான பலர் தங்களது ஆதங்கத்தை கூறி வந்த நிலையில் இங்கிலாந்து அணி கிரிக்கெட் என்பது அனைவருக்குமானது என்ற நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்க பங்காற்றியது பாராட்டுக்குரிய செய்தி.

- Advertisement -