கிரிக்கெட்

சந்தர்பால் கண்களின் கீழ் மின்னும் ஸ்டிக்கர்களின் ரகசியம்

ரிச்சர்ட்ஸ், லாரா போன்ற சூரியன்களின் வெளிச்சம் மெல்ல மெல்லக் குறைந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி இருளில் மூழ்க இருந்த சமயத்தில் நிலவு போன்று தனித்து மின்னியவர் சிவ்நரைன் சந்தர்பால். தனக்கே உரிய வித்தியாசமான ஸ்டேன்சின் உதவியால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். களத்திற்கு வந்து ஒரு பெயில்சை தரையில் ஊன்றி அதை பேட்டால் அடித்து கார்ட் எடுத்துக் கொள்ளுதளிலும் வித்தியாசமான அணுகுமுறையோடு இருந்தவர் சந்தர்பால். எந்த பவுலர்களுக்கும் தகர்க்க முடியாத எஃகு கோட்டையாக விளங்கியவர் சந்தர்பால்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகள் என்றால் யாரும் தகர்க்க முடியாத சுவர் போன்று நின்று ஆடக்கூடியவர். ஒரு நாள் போட்டி என்றால் ஆட்டத்தை மெதுவாக எதிரணியின் பக்கத்தில் இருந்து தமது பக்கத்திற்கு இழுத்து வரும் வித்தை தெரிந்தவர். இவரைப் போல ஒரு முறை ஆவது பேட்டிங் பிடித்துப் பார்க்க முயலாத ஆட்களே இல்லை என்று கூறலாம்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட காமராஜ் – உமா தம்பதிக்கு மகனாக கயானா நாட்டில் பிறந்த சந்தர்பால், 20000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவரின் ஆட்டத்தைப் பாராட்டி ஐசிசி, 2008ம் ஆண்டின் சிறந்த வீரர் என்ற விருதை இவருக்கு வழங்கியது. சச்சின் டெண்டுல்கர் என்ற திமிங்கிலத்தின் முன்பு எப்படி டிராவிட் என்ற சுறா மீன் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாமல் போனதோ அதே போல தான் லாரா என்ற உலகத்தர வீரர் அணியில் இருந்ததால் சந்தர்பாலின் திறமைகள் பலருக்கு தெரியாமலே போய்விட்டது.

கண்களின் கீழ் மின்னும் ஸ்டிக்கர்களின் ரகசியம்

சந்தர்பால் ஒவ்வொரு முறை களத்திற்கு வரும் போதும் இரண்டு கண்களுக்கு கீழும் ஏதோ ஸ்டிக்கர் போல ஒட்டி இருப்பார். அது என்ன? எதற்காக ஒட்டிய இருக்கிறார் போன்ற கேள்விகள் பலருக்கும் எழுந்திருக்கும். சிலர் அது அவரது நம்பிக்கை என்றெல்லாம் நினைத்து இருந்தார்கள். ஆனால் அது என்ன? எதற்கு பயன்படுத்தினார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

களத்தில் நின்று ஆடும் போது சூரிய ஒளி நேராக கண்களில் தாக்கினால் அது பார்வையை சிறிது மங்கலாக்கும். இதனால் ஆட்டத்திலிருந்து கவனம் சிதறும் என்பதாலும் இந்த ஸ்டிக்கர்களை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஸ்டிக்கர்களை ஓட்டினால் மங்கலான பார்வை இல்லாது ஆட முடியும். அதனால் ஆட்டத்தின் கவனம் எங்கும் சிதறாமல் இருக்கும். குறிப்பாக கண்களில் வெள்ளை விழிகளில் சூரிய ஒளி படாமல் இந்த ஸ்டிக்கர்கள் பாதுகாக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகளில் அதிகமாக வெயில் இருப்பதால் இந்த முறையை அவர் பயன்படுத்தியுள்ளார். அமெரிக்க புட்பால் ஆட்டங்களிலும் வீரர்கள் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதைக் காண முடியும். எது எப்படியோ… அது என்ன ஸ்டிக்கர்கள் என்ற ரசிகர்களின் பல நாள் கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்து விட்டது.

Published by