நான் ஏன் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை? – தவான் விளக்கம்!

0
2929

சஞ்சு சாம்சன் ஏன் பிளேயிங் லெவனில் இல்லை? – ஷிகர் தவான் பதிலளித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி முற்றிலுமாக மழை காரணமாக தற்போது ரத்தாகியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, குறைவான பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இருந்தது தான் காரணம் என்று பலரும் கூறினர். இதனை கருத்தில் கொண்டு ஆறு பந்து வீச்சாளர்களுடன் இன்றைய தினம் இந்திய அணி களமிறங்கியது.

முதல் போட்டியில் நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன் வெளியில் அமர்த்தப்பட்டு, தீபக் ஹூடா உள்ள எடுத்துவரப்பட்டார். அடுத்ததாக தாக்கூர் வெளியில் அமர்த்தப்பட்டு தீபக் சஹர் எடுத்துவரப்பட்டார்.

சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் வெளியில் அமர்த்தப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு போட்டி ரத்தான பிறகு கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“முதல் போட்டியில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி தவறு செய்து விட்டோம். எங்களுக்கு இப்போது ஆறாவது பந்துவீச்சாளர் அவசியமாக இருந்தது. அதனால் சஞ்சு சாம்சன் வெளியில் அமர்த்தப்பட்டு தீபக் ஹூடாவை உள்ளே எடுத்து வந்தோம்.

மேலும், மிடில் ஓவர்களில் இடது கை பேட்ஸ்மன்கள் தேவை என்பதால் ரிஷப் பண்ட் தக்க வைக்கப்பட்டார். இதைத் தாண்டி சஞ்சு சாம்சன் வெளியில் அமர்த்தப்பட்டதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.” என்று தெளிவு படுத்தினார் தவான்.