புவிக்கு கொடுக்காமல், நான் ஏன் கடைசி ஓவரை ஆவேஷ் கானுக்கு கொடுத்தேன்; ரோகித் சர்மா ஓபன் டாக்!!

0
177

இரண்டாவது டி20 போட்டியில் கடைசி ஓவரை எதற்காக ஆவேஷ் கானிடம் கொடுத்தேன் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து பேச்சாளர் ஓபட் மெக்காய் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வேகமாக விக்கெட்டுகளை இழக்க துவங்கினர். ரோகித் சர்மா முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். 

- Advertisement -

அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் சரிய துவங்கின. மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை மூன்று இலக்க ரன்களை எட்ட உதவினர். இவர் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவருடன் ஜோடியாக விளையாடிய ஜடேஜா 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெடுக்களையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சில் சற்று தடுமாறியது. துவக்க வீரர் பிரண்டன் கிங் மட்டுமே அரைசதம் அடித்தார். இவரும் 68 ரன்களுக்கு வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக இருந்து வெற்றியின் விளிம்பை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

அப்போது ஆவேஷ் கானை பந்துவீச ரோகித் சர்மா அழைத்தார். அனுபவ வீரர் புவனேஸ்வர் குமாருக்கு மீதம் இரண்டு ஓவர்கள் இருக்க, எதற்காக ரோகித் சர்மா இளம் வீரரை அழைக்கிறார் என்று பலரும் குழம்பினர். இந்நிலையில் முதல் பந்தை நோ-பாலாக வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட டெவான் தாமஸ் சிக்ஸர் விளாசினார். ஐந்து பந்துகளுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 2வது பந்தில் பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். 

- Advertisement -

புவனேஸ்வர் குமார் இருக்கும்பொழுது எதற்காக ஆவேஷ் கான் இடம் இறுதி ஓவர் கொடுக்கப்பட்டது என போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 

“எனக்கும் நன்றாக தெரியும் புவனேஸ்வர் குமார் கடைசி ஓவர்களில் பந்து வீசுவதற்கு நல்ல அனுபவம் பெற்றவர் என்று. இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பை நாம் கொடுக்கவில்லை என்றால், எப்போது தான் அவர்களும் அனுபவம் பெறுவார்கள். இது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும். அவர்களை நாம் ஊக்கப்படுத்தவில்லை என்றால் பின்னடைவு ஒரு வீரருக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த அணிக்கும்தான். ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு நிறைய திறமைகள் இருக்கின்றன. அவருக்கு அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடைசி ஓவரை கொடுத்தேன். நிச்சயம் அவர் இதிலிருந்து அனுபவங்களை பெற்றுக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக செயல்படுவார் என்று நம்புகிறேன். தொடர்ந்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்கு நானும் பல முயற்சிகளை எடுத்து வருகிறேன்.” என்றார்.