அக்ஸர் பட்டேலுக்கு பதில் தீபக் ஹூடாவை டீம்ல எதுக்காக எடுத்தாங்க; இதான் காரணமா இருக்கும் – கம்பீர் கொடுத்த விளக்கம்!

0
916

தீபக் ஹூடாவை அக்சர் பட்டேலுக்கு பதிலாக அணியில் எடுப்பதற்கு காரணம் என்னவென்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் கௌதம் கம்பீர்.

சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது மூணாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் அரையறுதியின் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாக விடும் என தெரிந்தது.

- Advertisement -

இதனையடுத்து போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 ரன்கள் அடித்து அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்தார்.

இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. அக்சர் பட்டேலில் வெளியில் அமர்த்தி விட்டு தீபக் ஹுடாவை உள்ளே எடுத்து வந்து கூடுதல் பேட்டிங் பலத்துடன் களம் இறங்கியது. ஆனால் தீபக் ஹூடா எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. மூன்று பந்துகள் மட்டுமே பிடித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சில் திணறியது. முதல் 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதற்கு அடுத்ததாக மில்லர் மற்றும் மார்க்ரம் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை விக்கெட் இழக்காமல் எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 135 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. புள்ளிபட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

போட்டியில் தீபக் ஹூடாவிற்கு பவுலிங் வாய்ப்பு கொடுக்கவில்லை. பவுலிங் வாய்ப்பு கொடுக்காமல் எதற்காக அவரை அணியில் வைத்திருக்க வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கௌதம் கம்பீர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “டாஸ் போடும்பொழுது இந்திய அணியில் இப்படி ஒரு மாற்றம் இருக்கிறது என ரோகித் சர்மா கூறுகையில் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதற்காக தீபக் ஹுடாவை உள்ளே எடுத்து வருகிறேன் என்று அவர் விளக்கம் அளிக்கவில்லை.

அணியில் ஆறாவது பவுலராக இவர் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தென்னாபிரிக்கா அணியில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்களை அச்சுறுத்த எடுத்து வந்திருக்கலாம் என்று நான் முதலில் நினைத்தேன்.

ஆனால் அவருக்கு பவுலிங் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், அந்த இடத்தில் ரிஷப் பண்ட்டை ஆட வைத்திருக்கலாம். எதற்காக இப்படி ஒரு முட்டாள்தனத்தை இந்திய அணி செய்தது என்று எனக்கு தற்போது வரை புரியவில்லை. ஒருவேளை அவரை அதற்காகத்தான் எடுத்து வந்திருந்தால், நடுவில் நடந்த சில குழப்பங்களால் ரோகித் சர்மா சரியாக முடிவெடுக்கவில்லை என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.” என தெரிவித்தார்.