டாஸ் ஜெயிச்ச பிறகும் நான் ஏன் பேட்டிங் தேர்வு செய்தேன்?; எங்கள் தோல்விக்கு காரணம் அந்த இரண்டு சம்பவம் தான் – கேஷவ் மகராஜ் பேட்டி!

0
353

தென்னாபிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்னவென்று கேப்டன் கேஷவ் மகராஜ் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-தென்னாபிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மஹராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் அரை சதங்கள் அடித்து அணியின் ஸ்கொரை வலுவான நிலைக்கு எடுத்து சென்றனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் 35(34) ரன்கள் அடித்தார். 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 278 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான் துரதிஷ்டவசமாக 93(84) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 113(111) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறசெய்தார். இது அவரது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாகும். அவருடன் கடைசி கட்டத்தில் இணைந்த சஞ்சு சாம்சன் 30(36) ரன்களில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். தற்பொழுது தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் கேசவ் மகராஜ் கூறுகையில், “போட்டியில் இப்படி ஒரு பனிப்பொழிவு இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதன் காரணமாகத்தான் டாஸ் வென்ற பிறகு நான் பேட்டிங் தேர்வு செய்தேன். ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்துவதற்கு நாங்கள் பல முயற்சிகளை எடுத்தோம். எதுவும் பலனளிக்கவில்லை. மைதானம் நேரம் ஆக ஆக மிகவும் ஸ்லோவாகிக் கொண்டே இருந்தது. அதன் காரணமாக பேட்டிங் செய்வதற்கும் எளிதாக இருந்தது. பனிப்பொழிவு மற்றும் பந்துவீச்சில் ஸ்லோ இரண்டின் காரணமாகத்தான் நாங்கள் தோல்வியை தழுவி இருக்கிறோம். டிசைடர் போட்டியில் தவறுகளை சரி செய்து மீண்டும் வருவோம்.” என்றார்.

- Advertisement -