பலரின் கணிப்பையும் பொய்யாக்கிய ஆர்சிபி; அணியில் என்னென்ன மாற்றம்? யார் நீக்கம்? – லிஸ்ட் இதோ!

0
3259

ஆர்சிபி அணி யார் யாரை தக்க வைத்திருக்கிறது? யார் யாரை வெளியேற்றி இருக்கிறது? என்பது பற்றிய விவரங்களை இங்கே காண்போம்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வீரர்களில் யாரை தக்க வைக்க வேண்டும்? யாரை வெளியேற்ற வேண்டும்? என முடிவு செய்து அதற்கான இறுதிப் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கான கால அவகாசம் முடிவடைந்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒன்றன்பின் மற்றொன்றாக தக்கவைக்கப்பட்ட, வெளியேற்றபட்ட பட்டியல் மற்றும் வேறு அணியிலிருந்து டிரேட் செய்யபட்ட வெளியிட்டு வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நீக்கிய, தக்கவைத்த மற்றும் டிரேட்செய்த வீரர்களின் விபரங்களை காண்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தக்கவைத்துள்ள வீரர்கள் :

- Advertisement -

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்சல் படேல், டேவிட் வில்லி, மஹி கர்ண் லோம்ரோர், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்

இதில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் பரிமாற்றம் மூலம் டிரேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பெங்களூர் அணி இம்முறைப்படி எந்தவொரு வீரரையும் எடுக்கவில்லை.

மொத்தம் 5 வீரர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட அதே அணி தான் நீடிக்கிறது என்றே கூறலாம். பலரும் பல கணிப்புகளை பெங்களூரு அணி மீது முன்வைத்தனர். இவை அனைத்தையும் பொய்யாக்கி பல வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தக்கவைத்துள்ளது.

தற்போது பெங்களூர் அணி கைவசம் 8.75 கோடி ரூபாய் உள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கான 2 இடங்கள் காலியாகவுள்ளது.