” அன்று 49 இன்று 68 ; ராசி இல்லாத ஏப்ரல் 23 ” – ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான சாதனையை படைத்துள்ள பெங்களூர் அணி

0
71
RCB 68 vs SRH

ஐ.பி.எல் என்றாலே எட்டு அணிகளோ பத்து அணிகளோ, எத்தனை கோப்பையை வென்ற அணிகளோ, ஆனால் தனக்கென்று தனி கவர்ச்சியோடு, பெரிய இரசிக பட்டாளத்தோடு, ஒரு கோப்பையையும் வெல்லாமல் ஒரு அணி இருக்கிறதென்றால் அது ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணிதான்!

கிறிஸ் கெயிலின் இமாலய சிக்ஸர்களும் சதங்களும், டிவிலியர்ஸின் அசாதாரண இன்னிங்ஸ்களும், விராட்கோலியின் கிளாஸ் அட்டாக் பேட்டிங்கும் என பெங்களூர் முக்கிய நட்சத்திரங்களின் கூடாரம். வெற்றியோ தோல்வியோ அந்த அணிக்கான இரசிகர்கள் அந்த அணியை ஆதரிப்பது உச்சத்தில்தான் இருக்கும்.

ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரின் போதும், கடந்த கால தோல்விகளை எல்லாம் மறந்துவிட்டு பெங்களூர் அணி வீரர்கள் வருகிறார்களோ இல்லையோ, பெங்களூர் அணி இரசிகர்கள் புதிய நம்பிக்கையில் புத்துணர்ச்சியாய் களமிறங்குவார்கள். பெங்களூர் அணிபோல் உச்சபட்ச கிரிக்கெட் விருந்து வைத்த அணியும் கிடையாது, பட்டினி போட்ட அணியும் கிடையாது.

இன்றைய ஏப்ரல் 23ஆம் தேதியில்தான் 2013ஆம் ஆண்டு கெயிலின் 175 ரன்களோடு, ஐ.பி.எல்-ன் அதிகபட்ச ரன்னான 263 ரன்களை பதிவு செய்தது பெங்களூர் அணி.
இதே ஏப்ரல் 23 ஆம் தேதிதான் 2017ஆம் ஆண்டு ஐ.பி.எல்-ன் மிகக்குறைந்த ஸ்கோரான 49 ரன்னையும் பெங்களூர் அணியே பதிவு செய்தது.
இன்றும் ஏப்ரல் 23 ஆம் தேதிதான் தனது இரண்டாவது மிகக்குறைந்த 68 ரன்களையும் பதிவு செய்திருக்கிறது. இது ஒட்டுமொத்த ஐ.பி.எல்-ல் ஐந்தாவது மிகக்குறைந்த ஸ்கோரும் ஆகும்!