பெங்களூர் ரசிகர்களின் இச்செயல் எங்களை உணர்ச்சி வசப்படுத்தியது – கேப்டன் டூ பிளசிஸ் உருக்கம்

0
52
Faf du Plessis RCB

பதினைந்தாவது ஐ.பி.எல் சீசனின் இறுதிபோட்டிக்குக் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் தகுதி பெற்றிருக்கின்றன. அதேவேளையில் பதினைந்தாவது முறையாக பெங்களூர் அணியின் ஐ.பி.எல் கோப்பை கனவும் கனவாகவே கலைந்திருக்கிறது!

நேற்று குஜராத்தின் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன. இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியும், இறுதி போட்டியும் மட்டும் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடப்பதால், புதிய ஆடுகளம் குறித்த எந்தக் கணிப்பும் இரு அணிகளிடமும் இல்லை. எனவே முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன், ஆடுகளத்தைப் புரிந்து கொள்வதற்காக பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

பெங்களூர் அணியின் ஓபனர்கள் விராட்கோலி-பாஃப் டூ பிளிசிஸ் ஜோடி இந்த ஆட்டத்திலும் ஏமாற்ற, ராஜஸ்தான் பவுலர்களில் டிரெண்ட் போல், பிரசித் கிருஷ்ணா, ஒபிட் மெக்காய் அசத்த, ரஜத் பட்டிதார் மட்டுமே அரைசதம் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரின் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ஓபனர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஜோடி பவர்-ப்ளேவில் அதிரடியாய் ஆட, ஜாஸ் பட்லர் இறுதிவரை நிலைத்து இந்தத் தொடரில் நான்காவது சதமடிக்க, அவரைக் கட்டுப்படுத்த முடியாத பெங்களூர் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை அற்றுப் போனார்கள். முடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் எளிதாய் வெற்றிப் பெற்று இறுதி போட்ட்டிக்குள் நுழைந்தது. ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் ஆனார்!

இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்கு நேற்று கடைசிப் போட்டியாக அமைய, போட்டிக்குப் பிறகு பெங்களூர் அணி கேப்டன் மனம் திறந்து உருக்கமாகப் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சைக் கேட்ட தொலைக்காட்சி வர்ணனையாளர்களே மிகச்சிறப்பாக பேச்சு என்று பாராட்டினார்!

- Advertisement -

நேற்று பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் பேசியதிலிருந்து “இந்தத் தொடர் ஆர்.சி.பி அணிக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. இது பெருமையாக இருக்கிறது. அணிக்கான ரசிகர்களின் ஆதரவு என்பது அற்புதமானது. நாங்கள் எங்கு விளையாடினாலும் அவர்கள் மிகச்சிறப்பான ஆதரவை வழங்கினார்கள். மும்பை டெல்லி ஆட்டத்தின் போது மைதானத்தில் அவர்கள் ஆர்.சி.பி ஆர்.சி.பி என எழுப்பிய சத்தத்தில் அதைப் பார்த்த நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு போனோம். ஆர்.சி.பி அணி இரசிகர்களின் ஆதரவு என்பது சிறப்பானது” என்று உருக்கமாகக் கூறினார்!