ஆர்சிபி ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம்; கைவரிசையை காட்டிய ஹேக்கர்!

0
115

ஆர்சிபி அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தை அதிகாலையில் ஹேக்கர் ஒருவர் கைவரிசை காட்டி முடக்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 2008ம் ஆண்டிலிருந்து ஒரு அங்கமாக இருந்துவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்றாலும், பலம்மிக்க அணியாகவே ஒவ்வொரு முறையும் காணப்படும்.

- Advertisement -

ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் தற்போது 6.4 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கிறது. ஜனவரி 21ம் தேதி அதிகாலை இந்த ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அதிலிருந்து சம்மந்தம் அற்ற ட்வீட்களும் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹேக் செய்யப்பட்டதை உறுதி செய்யும் விதமாக தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளது ஆர்சிபி அணி நிர்வாகம். அதில்,

“ஜனவரி 21ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கம் கைமீறி சென்றுள்ளது. சில காலம் அது ஆர்சிபி கட்டுப்பாட்டில் இருக்காது. பாதுகாப்பு சார்ந்த அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் செய்து வைத்திருந்தாலும் எங்களது கட்டுப்பாட்டை மீறி துரதிஷ்டவசமான இப்படி நேர்ந்திருக்கிறது.

- Advertisement -

குறிப்பிட்ட சில காலம் அதிலிருந்து வரும் தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் அனைத்தும் ஆர்சிபி செய்தது அல்ல என்று கூறிக் கொள்கிறோம். இந்த இன்னல்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது அதிகாரப்பூர்வ கணக்கை திரும்பப் பெற வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் திரும்பவும் வருவோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.