ஐபிஎல் 2024

பவர் ஹிட்டிங் டி20யில்.. கோலி மாதிரியான பிளேயர்க்கு இதுதான் முக்கிய வேலை – ஆர்சிபி கோச் பேட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், டி20 குறித்தும் விராட் கோலி குறித்தும் சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டின் மாற்றம்

நவீன டி20 கிரிக்கெட் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகிறது. 20 ஓவர்களில் 170 முதல் 180 ரன்கள் என்கிற இலக்கை தாண்டி தற்போது 280 ரன்கள் வரை குவிக்கும் கிரிக்கெட் தொடராக மாறி வருகிறது. அதற்குத் தகுந்தவாறே தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் 10 அணிகள் அதிரடியான வீரர்கள் தங்கள் அணிக்குள் எடுத்து வைத்திருக்கிறார்கள். மேலும் டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சு முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சம அளவிலான வீரர்களை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் மற்ற அதிரடி வீரர்களை ஒப்பிடும்போது குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வரும் விராட் கோலி குறித்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். மேலும் இந்த முறை பெங்களூர் அணிக்கு என்ன தேவை என்பது குறித்தும் அதில் கவனம் செலுத்தப்பட்டு அதற்கு தகுந்தவாறு அணியினை தேர்வு செய்திருப்பதாகவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சூப்பர் பிட்னஸ் இளைஞன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி போன்ற வீரர்களுக்கும் டி20 கிரிக்கெட் விளையாட்டில் இன்னும் இடம் இருக்கிறது. அவர் வெளிப்படையாகவே சூப்பர் பிட்னஸ் மற்றும் வலிமையான ஒரு இளைஞன். இது போன்ற உயர்தர மற்றும் புத்திசாலியான கிரிக்கெட் வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் இன்னும் இடம் இருக்கிறது. இவர் போன்ற வீரர்கள் தான் இன்னிங்சை தெளிவாக எடுத்துச் செல்லக் கூடியவர்கள். அதிகாரத்தை நோக்கி ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க:பந்து 3 வழிகளில் மட்டுமே விலகும்.. என் மாயாஜால ஸ்பின் ரகசியம் இதுதான் – மௌனம் திறக்கும் வருண்

அதை நாங்கள் ஸ்கோர் போர்டுகளிலும் பார்த்தோம். சில விதிமாற்றங்கள் பந்துவீச்சு செயல் திறனையும் சமநிலைப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் விளையாட்டில் நாங்கள் இன்னும் சமநிலையை வைத்திருக்கிறோம்” என்று பேசி இருக்கிறார். நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூர் அணியில் பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் போன்ற அதிரடியான ஆட்டக்காரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளைய போட்டி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -
Published by