ஐபிஎல் 2024

17 ஓவர்.. ஆர்சிபி அசத்தல் வெற்றி.. பஞ்சாப் வெளியேறியது.. சிஎஸ்கேவுக்கு வந்த புது தலைவலி

நடப்பு ஐபிஎல் தொடரின் 58 வது போட்டியில் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தோற்கும் அணி பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும். இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 9(7), வில் ஜேக்ஸ் 12(7) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதார் ஜோடி சிறப்பாக விளையாடி 32 பந்தில் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஜத் பட்டிதார் 23 பந்தில் மூன்று பவுண்டரி ஆறு சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சேர்ந்து 46 பந்தில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். விராட் கோலி 47 பந்தில் ஆறு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார்.

இறுதிக்கட்டத்தில் கேமரூன் கிரீன் 27 பந்தில் 46 ரன்கள், தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 18 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் தரப்பில் ஹர்சல் படேல் கடைசி ஓவரில் மூன்று விக்கெட் கைப்பற்றியதின் மூலம், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிறத் தொப்பியை கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ 27(16), ரைலி ரூசோவ் 61(27), ஷஷாங்க் சிங் 37(19), கேப்டன் சாம் கரன் 22(16) மட்டுமே குறிப்பிடும்படி ரன்கள் எடுத்தார்கள். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய இலக்கை துரத்துவதற்கு ஏற்ப ரன் பங்களிப்பை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்.. விராட் கோலி படைத்த மெகா சாதனை.. தொடரும் ரன் வேட்டை

இந்த போட்டியில் முடிவில் 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் மூன்று விக்கெட் கைப்பற்றினார். அந்த அணி பெற்ற ஐந்தாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி வென்று, சிஎஸ்கே அணி இரண்டு போட்டிகளில் தோற்றால் நிலைமைகள் தலைகீழாக மாறும். இளமை இந்த வெற்றி அந்த அணிக்கு மிகவும் முக்கியமானது. தற்போது பெங்களூரு அணி ஏழாவது இடத்தில் தொடர்கிறது.

Published by