ஒரு வழியாக மௌனம் கலைத்தது பெங்களூர் அணி – விராட் கோலிக்குப் பின் புதிய கேப்டன் அறிவிப்பு

0
68
Virat Kohli RCB

கடந்த ஆண்டு வரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விராட் கோலி கேப்டனாக தலைமை தாங்கி வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விளையாடுவதற்கு முன்பாகவே தனது கேப்டன்சி பொறுப்பை இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் முடித்துக் கொள்வதாக விராட் கோலி அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை யார் தலைமை தாங்குவது என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. அந்தக் கேள்விக்கான பதிலை இன்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அளித்துள்ளது.

- Advertisement -

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபேப் டு பிளேசிஸ்

பெங்களூர் அணி ஃபேப் டு பிளேசிஸ்சை 7 கோடி ரூபாய்க்கு நடந்து முடிந்த மெகா ஏலத்தில் கைப்பற்றியது. ஃபேப் டு பிளேசிஸ் கேப்டனாக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். எனவே அவர்தான் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பதவி ஏற்பார் என்று ரசிகர்கள் முன்பே தங்களுடைய கணிப்பை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.அவர்களது கணிப்பின்படியே இன்று அவரை பெங்களூர் அணியின் புதிய கேப்டன் பதவியை ஏற்று இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ஃபேப் டு பிளேசிஸ்

தென் ஆப்பிரிக்க வீரரான ஃபேப் டு பிளேசிஸ் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை மொத்தமாக 2935 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 34.94 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131.09 ஆகும்.

2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடி பின்னர் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் புனே அணியில் விளையாடினார். பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டு சென்னை அணி மூலமாக கைப்பற்றப்பட்டு கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடினார்.

- Advertisement -

சென்னை அணிக்காக பல போட்டிகளில் மிக அற்புதமாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என ஒரு ஆஸ்தான வீரராக இதுவரை அவர் விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மொத்தமாக 633 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார்.

பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் கைதேர்ந்த ஃபேப் டு பிளேசிஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை கேப்டனாக வழி நடத்த இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்பதே அனைத்து பெங்களூர் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஃபேப் டு பிளேசிஸ் இந்தாண்டு பூர்த்தி செய்வாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -