சிகப்பு நிறப் பந்தை இனி தொடவே மாட்டார் – சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா விலக வேண்டிய சூழல்

0
890
Ravindra Jadeja

இந்திய அணி தற்போது முழு மூச்சோடு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சந்திக்க தயாராகி வருகிறது. வரும் 17ஆம் தேதி நடக்க இருந்த இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக 26ம் தேதி நடக்க உள்ளது. இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதால் விராட் கோலி தலைமையிலான அணி சரித்திரத்தை மாற்றி அமைக்கும் முனைப்பில் உள்ளது. விராட் கோலி தலைமையில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சீரிசை இந்திய அணி வென்று விட்டது. கிட்டத்தட்ட இங்கிலாந்து மண்ணிலும் பல நல்ல வெற்றிகளைப் பெற்று விட்டது. மீதமிருக்கும் தென் ஆப்பிரிக்கா நாட்டில் வெற்றி பெற்றால் அது கோலியின் கேப்டன்சி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும்.

இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர் ஒருவர் யாரென்றால் ரவீந்திர ஜடேஜா. தேவையான நேரத்தில் அணிக்கு முக்கியமான ரன்களும் முக்கியமான நேரங்களில் எதிரணியின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி தரும் சிறப்பான வீரர் இவர். இந்திய அணியின் பல முக்கிய வெற்றிகளுக்கு இவர் காரணமாக அமைந்துள்ளார். களத்தில் விளையாடும் 11 வீரர்களில் சேர்க்கப்படாமல் இருந்த காலத்தில்கூட சப்ஸ்டிடுட் வீரராக களம் இறங்கி பல முக்கிய கேட்சிகளையும் ரன் அவுட்களையும் அடித்து ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கமாகத் திருப்பியுள்ளார்.

- Advertisement -

இவ்வளவு சிறப்பு மிக்க வீரர் தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அவர் அடைந்திருக்கும் காயம் ஆகும். நியூசிலாந்து தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்னரே இவருக்கு காயம் என்று பிசிசிஐ அறிவித்தது. அந்த காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால் தற்போது அது குணமாக நான்கு முதல் ஆறு மாத காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

பிசிசிஐ இல் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி ஜடேஜாவுடன் ஆடிவரும் சக வீரர் ஒருவரே ஜடேஜா காயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 3 பார்மட் கிரிக்கெட்டையும் விளையாடிக்கொண்டு காயத்தையும் சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்து ஜடேஜா அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பங்கேற்பாரா அல்லது ஏதாவது ஒரு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பாரா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.